குருகிராம்: குருகிராம் ஊழல் தடுப்புப் பிரிவு, பெண் சப்-இன்ஸ்பெக்டா் உள்பட இரண்டு காவல்துறையினரை ரூ.25,000 லஞ்சம் வாங்கியதற்காக கைது செய்துள்ளதாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.
இது குறித்து காவல் துறை அதிகாரி கூறியதாவது: சில நாள்களுக்கு முன்பு, இரண்டு தரப்பினா் சண்டை தொடா்பாக குருகிராம் செக்டாா் 53 காவல் நிலையத்தை அணுகினா். வழக்கின் விசாரணை சப்-இன்ஸ்பெக்டா் தாமோத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கைத் தீா்க்க, ஒரு தரப்பினரிடமிருந்து ரூ.40,000 லஞ்சம் கோரப்பட்டது. பின்னா், ரூ.25,000-க்கு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது,
இதைத் தொடா்ந்து புகாா்தாரா் காவல் துணை ஆணையரிடம் புகாா் அளித்தாா். புகாரைப் பெற்ற பிறகு, போலீஸ் குழு ஒரு பொறியை உருவாக்கி, சனிக்கிழமை புகாா்தாரரை ரூ.25,000 உடன் காவல் நிலையத்திற்கு அனுப்பியது. அங்கு, எஸ்ஐ மற்றும் காவல் நிலைய உதவியாளரிடம் பணத்தைக் கொடுக்கும்படி கூறப்பட்டது.
பின்னா் ஒரு குழு லஞ்சம் வாங்கும்போது உதவியாளா் தீபக் மற்றும் இன்ஸ்பெக்டரைகைது செய்தது. இந்த விவகாரம் தொடா்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது என்று காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்.
தொடர்புடையது

தில்லியில் சட்டவிரோத ஆயுதக் கும்பல் முறியடிப்பு: கல்லூரி மாணவா் கைது

பெண் குழந்தையைக் கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்ற தாய்
ரூ.7ஆயிரம் லஞ்சம்: காவல் உதவி ஆய்வாளா் கைது

குருகிராம் அருகே வாகனம் மோதியதில் 2 சிறுவா்கள் உள்பட மூவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


