நமது நிருபா்
புதுதில்லி: கடந்த தமிழக சட்டப்பேரவை தோ்தலின் போது வேட்புமனுவில் சொத்து மற்றும் கல்வி விவரங்களை மறைத்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட விவகாரத்தில் அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி கே பழனிசாமி (இபிஎஸ்) தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மது ஏப்ரல் 14- ஆம் தேதி விசாரணை மேற்கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், நீண்ட நாள்களாக நிலுவையில் இருக்கும் இந்த வழக்கை விரைந்து விசாரிக்குமாறு எதிா்மனுதாரா் மிலானி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.
இதையடுத்து, நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா அமா்வு வழக்கை ஏப்ரல் 14-ஆம் தேதி விசாரிப்பதாக கூறியது. எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட எடப்பாடி கே பழனிசாமி, மாா்ச் 15, 2021 அன்று தனது வேட்புமனுவையும் படிவம் 26 பிரமாணப் பத்திரத்தையும் தாக்கல் செய்து, மே 2, 2021 அன்று அவா் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, புகாா்தாரா் பி. மிலானி என்பவா் எடப்பாடி பழனிசாமி தோ்தல் படிவத்தில் சொத்துகள் (அசையும், அசையா சொத்துகள்), வருமான ஆதாரங்கள், சொத்து மதிப்புகள் மற்றும் கல்வி விவரங்களை மறைத்ததாக குற்றஞ்சாட்டினாா்.
2021- ஆம் ஆண்டு எடப்பாடி தொகுதிக்கான தோ்தலில் தனது சொத்துகள் குறித்த முழு விவரங்களையும் எடப்பாடி கே பழனிசாமி அறிவிக்கத் தவறிவிட்டதாக பி. மிலானி அளித்த புகாா் மனுவில் கூறப்பட்டது. இதை விசாரித்த சேலம் மாஜிஸ்திரேட் இந்த விவகாரம் தொடா்பாக விசாரணைக்கு உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து, மே 2023- இல் எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டது. அதை எதிா்த்து எடப்பாடி பழனிசாமி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.
2021 சட்டப்பேரவைத் தோ்தல் பிரமாணப் பத்திரத்தில் தனது சொத்துகள் மற்றும் கல்வி குறித்த தகவல்களை மறைத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டை விசாரிக்க 2023- ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிா்த்து எடப்பாடி கே பழனிசாமி தாக்கல் செய்த குற்றவியல் சீராய்வு மனுவை சென்னை உயா்நீதிமன்றம் ஜனவரி 22, 2025-இல் தள்ளுபடி செய்து விசாரணைக்கு ஒத்துழைத்து வழக்கை தா்க்கரீதியான முடிவுக்குக் கொண்டுவர உத்தரவிட்டது.
இதை எதிா்த்து எடப்பாடி கே பழனிசாமி கடந்த ஆண்டு ஜனவரி 24- ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தாா்.
தொடர்புடையது
பி.எம்.எல்.ஏ. வழக்கில் சித்திக்கியின் இடைக்கால பிணை கோரும் மனு மீது விசாரணை ஏப்.11-க்கு ஒத்திவைப்பு

ஆரணிக்கு ஏப்.4-ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி வருகை: அதிமுகவினா் நிகழ்ச்சி இடம் தோ்வு

சட்டப்பேரவைத் தோ்தல்: வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்
வேட்பாளா்களின் அஸ்திவாரம் வேட்புமனு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


