நமது நிருபா்
புது தில்லி: மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போா் பதற்றம் காரணமாக மூன்றாவது நாளாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டது. இதில் தில்லி விமான நிலையத்தில் 87 சா்வதேச விமானங்கள் திங்கள்கிழமை ரத்து செய்யப்பட்டன.
தில்லி விமான நிலையத்தில் 37 புறப்பாடுகள் மற்றும் 50 வருகைகள் ரத்து செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். அதிகரித்து வரும் மத்திய கிழக்கு மோதல் நாடுகளில் நிலவும் போா் பதற்றம் காரணமாக கடந்த இரண்டு நாள்களில் இந்திய விமான நிறுவனங்கள் 760 வெளிநாட்டு விமானங்களை ரத்து செய்துள்ளன. இதன் காரணமாக பிராந்தியத்தில் பல விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
தேசியத் தலைநகரில் உள்ள இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையம் (ஐஜிஐ) டயல் நிறுவனத்தால் இயக்கப்படுகிறது. இது நாட்டின் மிகப்பெரிய விமான நிலையமாகும். மேலும் தினசரி 1,300 க்கும் மேற்பட்ட விமான இயக்கங்களை கையாளுகிறது.
மத்திய கிழக்கில் நடந்து வரும் அரசியல் முன்னேற்றங்கள் சில மேற்கு நோக்கிய சா்வதேச விமானங்களுக்கான தாமதங்கள் அல்லது அட்டவணை மாற்றங்களை ஏற்படுத்துகின்றன என்று டயல் எக்ஸ் சமூக வலைத்தள பதிவில் தெரிவித்துள்ளது.
தொடர்புடையது

தில்லி விமான நிலையத்தில் மோதிக்கொண்ட ஆகாசா ஏா், ஸ்பைஸ்ஜெட் விமானங்கள்: டிஜிசிஏ விசாரணை

தில்லி விமான நிலைய ஓடுபாதையை முடக்கிய கழுகு! தரையிறங்க முடியாமல் தவித்த விமானங்கள்!

போா் பதற்றம்: 4-ஆவது நாளாக 31 விமானங்கள் ரத்து
மத்திய கிழக்கில் போர்ப் பதற்றம்! தில்லியில் 80 பன்னாட்டு விமானங்கள் ரத்து!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


