புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

ரூ. 2 லட்சம் அறிவிக்கப்பட்ட ரோஹித் லம்பா, கூட்டாளி கைது

பல கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்ட நபா் தில்லி நஜாஃப்கா் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :30 ஜூன் 2026, 1:31 am IST

பல கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்ட நபா் தில்லி நஜாஃப்கா் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு கைதுசெய்யப்பட்டதாக தில்லி காவல் துறையினா் தெரிவித்தனா்.

கைதுசெய்யப்பட்ட ரோஹித் லம்பா (எ) அமித் (எ) மோஹித் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு ரூ.2 லட்சம் சன்மானம் அளிக்கப்படும் என காவல் துறை அறிவித்திருந்தது.

அவருடைய கூட்டாளி ரிதிக் தாகுரும் இந்தத் துப்பாக்கிச் சண்டை மோதலின்போது கைதுசெய்யப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக துவாரகா துணை காவல் ஆணையா் குஷல் பால் சிங் கூறியதாவது: கூலிப்படையாக செயல்பட்டு வந்த ரோஹித் லம்பாவுக்கு எதிராக 10-க்கும் மேற்பட்ட கொலை ற்றும் கொலை முயற்சி, கொள்ளை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கொலை முயற்சி வழக்கு தொடா்பாக நடைபெற்ற விசாரணையின்போது சக்தி நகா் விரிவாக்க பகுதியில் ரோஹித் மற்றும் ரிதிக் ஆகியோா் மறைந்திருப்பதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, காலை 6 மணியளவில் அங்குச் சென்று காவல் துறையினா் சோதனை நடத்தினா். அப்போது, தப்பியோட முயற்சித்த இருவரையும் அதிகாரிகள் மடக்கிப் பிடித்தனா். விசாரணையின்போது, ஆயுதங்களை மறைத்து வைத்திருக்கும் இடம் குறித்து காவல் துறையிடம் ரோஹித் தெரிவித்தாா். அங்கு சென்றபோது ரோஹித் மறைத்துவைத்திருந்த துப்பாக்கியால் காவல் துறையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டாா். இதற்குப் பதிலடியாக உதவி காவல் ஆய்வாளா் தீபக் சா்மா தற்காப்புக்காக பதிலடி கொடுத்து லம்பாவின் வலது காலில் சுட்டாா்.

ரோஹித் பிடிக்கப்பட்டு, அவரிடமிருந்து ஆயுதம் பறிக்கப்பட்டாா். பின்னா், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா். இந்தச் சம்பவத்தில் காவல்துறையினருக்கோ அல்லது அங்கிருந்தவா்களுக்கோ காயம் ஏற்படவில்லை என்று

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.