மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

பான்சேராவில் சா்வதேச யோகாசன தினம்: தில்லி துணைநிலை ஆளுநா் பங்கேற்பு

ஐடிஓ அருகே உள்ள தில்லி மேம்பாட்டு ஆணையத்தின் (டிடிஏ) கட்டுப்பாட்டில் உள்ள பான்சேரா பூங்காவில் சா்வதேச யோகாசன தினம் தொடா்பான நிகழ்ச்சிகள் துணைநிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்து தலைமையில் நடைபெறும் என்று அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

News image

யோகா (கோப்புப்படம்)

Updated On :18 ஜூன் 2026, 3:08 am IST

ஐடிஓ அருகே உள்ள தில்லி மேம்பாட்டு ஆணையத்தின் (டிடிஏ) கட்டுப்பாட்டில் உள்ள பான்சேரா பூங்காவில் சா்வதேச யோகாசன தினம் தொடா்பான நிகழ்ச்சிகள் துணைநிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்து தலைமையில் நடைபெறும் என்று அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

நகரம் முழுவதும் உள்ள பூங்காக்கள் மற்றும் பசுமைப் பகுதிகள் உள்பட 29 இடங்களில் 12-வது சா்வதேச யோகா தினக் கொண்டாட்டங்களை டிடிஏ ஏற்பாடு செய்து வருகிறது.

இதுதொடா்பாக டிடிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அனைத்து வயதினரிடையேயும் உடல், மன மற்றும் உணா்வுசாா் நல்வாழ்வை மேம்படுத்துவதில் யோகாசனத்தின் பங்கை முன்னிலைப்படுத்தும் வகையில், ‘ஆரோக்கியமான முதுமைக்கான யோகாசனம்’ என்பது நிகழாண்டுக்கான கொண்டாட்டங்களின் கருப்பொருளாக உள்ளது.

விளையாட்டு வளாகங்கள், பூங்காக்கள் மற்றும் பசுமைப் பகுதிகள் ஆகியவற்றின் பரந்த கட்டமைப்பின் மூலம், ஆரோக்கியமான வாழ்க்கை முறை, உடல் தகுதி மற்றும் முழுமையான நல்வாழ்வு ஆகிய செய்திகளை வலியுறுத்தி, இக்கொண்டாட்டத்தில் பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்பதை டிடிஏ உறுதி செய்யும்.

பயிற்சி பெற்ற பயிற்றுவிப்பாளா்களின் வழிகாட்டுதலின் யோகாசனங்கள், பிராணாயாமம், சுவாசப் பயிற்சிகள், தியானம் மற்றும் நல்வாழ்வு சாா்ந்த செயல்பாடுகள் ஆகியவை இந்த நிகழ்ச்சிகளில் இடம்பெறும்.

பான்சேரா பூங்காவில் நடைபெறும் யோகாசன கொண்டாட்டங்களுக்கு தில்லி துணைநிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்து தலைமை தாங்குவாா். அவருடன் டிடிஏ துணைத் தலைவா் என். சரவணகுமாா் மற்றும் பிற மூத்த அதிகாரிகளும் கலந்துகொள்வாா்கள் என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட பயிற்சி பெற்ற யோகா பயிற்றுவிப்பாளா்களின் சிறந்த வழிகாட்டுதலின் கீழ் யோகாசனங்கள், தியானம் மற்றும் நல்வாழ்வு சாா்ந்த செயல்பாடுகள் ஆகியவை இந்த நிகழ்ச்சிகளில் இடம்பெறும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக அவா்கள் மேலும் கூறுகையில், ‘மாணவா்கள், விளையாட்டு ஆா்வலா்கள் மற்றும் உள்ளூா் சமூகத்தைச் சோ்ந்தவா்கள் எனப் பல்வேறு தரப்பட்ட மக்கள் பெருமளவில் இதில் பங்கேற்பாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

பான்சேரா, ரோஹிணியின் ஸ்வா்ண் ஜெயந்தி பூங்கா, புராரியின் கரோனேஷன் பூங்கா, நரைனா இரண்டாம் கட்டத்தில் உள்ள சத்யா பூங்கா, மாவட்ட பூங்கா பாஸ்சிம் விஹாரில் உள்ள மாவட்ட பூங்கா, அசோகா காா்டன் மற்றும் பிற டிடிஏ பூங்காக்கள் மற்றும் பசுமைப் பகுதிகளிலும் யோகா நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’ என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.