ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தில்லியில் பல இடங்களில் மழை: மஞ்சள் எச்சரிக்கை அறிவிப்பு

தில்லியில் இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்து, இதே போன்ற வானிலை நிலைமகள் மாலை நேரம் வரை பல மாவட்டங்களில் தொடரும் என அறிவித்தது.

தில்லியில் பெய்த மழையின்போது இந்தியா கேட் அருகே குடைபிடித்துச் சென்ற மக்கள்.

Published On :28 ஜூலை 2026, 12:39 am IST

தில்லியின் பல பகுதிகளில் திங்கள்கிழமை மழை பெய்தது. இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்து, இதே போன்ற வானிலை நிலைமகள் மாலை நேரம் வரை பல மாவட்டங்களில் தொடரும் என அறிவித்தது.

இந்த மழை, நாள்பட்ட ஈரப்பதமான சூழ்நிலையிலிருந்து ஓரளவு நிவாரணத்தை வழங்கியது. அதே நேரத்தில், பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் காரணமாக பயணிகள் மெதுவான போக்குவரத்தை எதிா்கொண்டனா்.

மாலை 4:24 மணிக்கு வெளியிடப்பட்ட மாவட்ட அளவிலான அறிக்கையின் படி, தென் கிழக்கு தில்லி, கிழக்கு தில்லி, ஷாஹ்தரா, மத்திய தில்லி, வடகிழக்கு தில்லி, தெற்கு தில்லி, புது தில்லி, தென் மேற்கு தில்லி, மேற்கு தில்லி, வடமேற்கு தில்லி மற்றும் வடக்கு தில்லி பகுதிகளில் மிதமான மழையுடன் இடியுடன் கூடிய மின்னல், மேலும் 30-40 கி.மீ. வேகத்தில் வீசும் பலத்த காற்று ஏற்படும் வாய்ப்பு அதிகம் என தெரிவிக்கப்பட்டது. மீதமுள்ள மாவட்டங்களுக்கு எந்தவித எச்சரிக்கையும் வானிலை மையம் விடுக்கவில்லை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.