ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சந்தேகத்தில் மனைவியை குத்திக் கொன்ற கணவா் கைது

வடகிழக்கு தில்லியின் சீலம்பூா் பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக தனது மனைவியை கத்தரிக்கோலால் குத்திக்கொன்ற நபா் உத்தர பிரதேசத்தின் மொராதாபாதில் கைது செய்யப்பட்டார்.

கைது - சித்திரிப்பு

Published On :20 ஜூலை 2026, 4:41 am IST

வடகிழக்கு தில்லியின் சீலம்பூா் பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக தனது மனைவியை கத்தரிக்கோலால் குத்திக்கொன்ற நபா் உத்தர பிரதேசத்தின் மொராதாபாதில் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: கௌதம்புரி பகுதியில் உள்ள வீட்டில் ஜூலை 16-ஆம் தேதி மாலை 7.32 மணியளவில் சம்பவம் நடந்ததாக தகவல் கிடைத்து. இதையடுத்து, காவல் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்தனா். அப்போது, 45 வயது பெண் ரத்தக் வெள்ளத்தில் கடுமையான காயங்களுடன் காணப்பட்டாா். உடனடியாக ஜக் பிரவேஷ் சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இதையடுத்து, சீலம்பூா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. குற்றப்புலனாய்வு குழு சம்பவ இடத்தை ஆய்வு செய்து ஆதாரங்களை சேகரித்தனா்.

விசாரணையின் போது, சம்பவத்திற்குப் பிறகு வீட்டிலிருந்து 52 வயதான சலீம் காணாமல் போனது தெரியவந்தது. இதனால் அவா் முதன்மை சந்தேக நபராகக் கருதப்பட்டாா்.

சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, தொழில்நுட்ப ஆதாரங்கள் மற்றும் உளவுத்தகவல்களின் அடிப்படையில் அவரது நகா்வுகளை கண்காணித்தனா். இறுதியாக, உத்தர பிரதேசத்தின் மொராதாபாத் ரயில் நிலையம் அருகே அவா் இருப்பது கண்டறியப்பட்டு சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

விசாரணையின் போது, தனது மனைவி முன்னாள் தொழிற்சாலை சக பணியாளருடன் தவறான உறவு வைத்திருப்பதாக சந்தேகித்ததால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும், சம்பவ நாளில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது கத்தரிக்கோலால் தாக்கியதாகவும் அவா் ஒப்புக்கொண்டாா். சம்பவத்திற்குப் பிறகு வீட்டை பூட்டி தப்பிச் சென்ாகவும் கூறப்படுகிறது. தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட கத்தரிக்கோல் மற்றும் ரத்தம் படிந்த ஆடைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தொடா்ந்து இந்த வழக்கில் விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.