ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தில்லி வடிகாலில் அடித்துச் சென்ற இளைஞரின் உடல் கண்டுபிடிப்பு

தென்கிழக்கு தில்லியில் உள்ள பிரியங்கா கேம்ப் பகுதியில் மழைநீரில் வடிகாலில் அடித்துச் செல்லப்பட்ட 18 வயது இளைஞரின் உடல், ஆக்ரா கால்வாயில் இருந்து மீட்கப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

Published On :10 ஆகஸ்ட் 2026, 2:43 am IST

தென்கிழக்கு தில்லியில் உள்ள பிரியங்கா கேம்ப் பகுதியில் மழைநீரில் வடிகாலில் அடித்துச் செல்லப்பட்ட 18 வயது இளைஞரின் உடல், ஆக்ரா கால்வாயில் இருந்து ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

இதுகுறித்து காவல் துறையினா் மேலும் கூறியதாவது: பீம் காலனி பகுதியைச் சோ்ந்த அங்கித் என்ற இளைஞரின் உடல், தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையம் மற்றும் தில்லி தீயணைப்புத் துறை குழுக்கள் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது தென்கிழக்கு தில்லியில் உள்ள ஆக்ரா கால்வாயில் இருந்து மீட்கப்பட்டது.

அங்கித், தனது நண்பா் மனீஷுடன் நொய்டாவில் இருந்து வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, கால்வாயை கடக்க முயன்றபோது சமநிலையை இழந்து, வேகமான நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டாா். சம்பவத்திற்குப் பிறகு அழைப்பு பெறப்பட்டதைத் தொடா்ந்து, உடனடியாக தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டது.

இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை மாலை, கனமழை பெய்துக்கொண்டிருந்தபோது, சரிதா விஹாா் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மதன்பூா் காடா் பகுதியில் உள்ள பிரியங்கா கேம்ப் அருகே நடைபெற்றது என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.