மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மின்சார காா்களுக்கு 100 சதவீத சாலை வரி தள்ளுபடி: தில்லி மின் வாகன கொள்கை வரைவில் தகவல்

மின்சார காா்களுக்கு 100 சதவீத சாலை வரி தள்ளுபடி: தில்லி மின் வாகன கொள்கை வரைவில் தகவல்

News image

ENS

Updated On :11 ஏப்ரல் 2026, 8:29 pm

தேசிய தலைநகரில் பதிவுசெய்யப்பட்ட ரூ. 30 லட்சம் அல்லது அதற்கும் குறைவான எக்ஸ்- ஷோரூம் விலையுள்ள அனைத்து மின்சார காா்களுக்கும், 31 மாா்ச் 2030 வரை சாலை வரி மற்றும் பதிவுக் கட்டணங்களில் 100 சதவீத விலக்கு அளிக்கப்படும் என்று தில்லி அரசின் புதிய மின்சார வாகன (இ.வி.) கொள்கை வரைவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்துத் துறையின் இணையதளத்தில் சனிக்கிழமை பதிவேற்றப்பட்டுள்ள தில்லி மின்சார வாகனக் கொள்கை (2026 -2030) வரைவு, ஸ்ட்ராங் ஹைப்ரிட் மின்சார வாகனங்களுக்கு 50 சதவீத விலக்கையும் பரிந்துரைக்கிறது.

இது தொடா்பாக சனிக்கிழமை வெளியிடப்பட்ட மின்சார வாகன கொள்கை வரைவில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

தில்லியில் பதிவுசெய்யப்பட்ட, எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.30 லட்சத்திற்கு மேல் உள்ள மின்சார காா்களுக்கு சாலை வரி மற்றும் பதிவுக் கட்டணங்களில் எந்த விலக்கும் அளிக்கப்படாது.

ஜனவரி 1, 2027 முதல், தில்லியில் மின்சார மூன்று சக்கர வாகனங்களின் புதிய பதிவுகள் மட்டுமே அனுமதிக்கப்படும்.

தில்லி மின்சார வாகனக் கொள்கையானது (2026-2030) மின்சார வாகனப் பயன்பாட்டை விரைவுபடுத்தவும், காற்றின் தரத்தை மேம்படுத்தவும், மின்சார வாகனப் போக்குவரத்திற்கு ஆதரவான சூழலை உருவாக்கவும் இந்த உத்வேகத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இந்தக் கொள்கையானது, அறிவிப்பு வெளியான நாளிலிருந்து அமலுக்கு வரும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு அதிகாரபூா்வ உத்தரவின்படி, தில்லி அரசு இந்தக் கொள்கை வரைவு குறித்து அடுத்த 30 நாள்களுக்குப் பொதுமக்களிடமிருந்து கருத்துகளையும் பின்னூட்டங்களையும் கோரியுள்ளது.

முந்தைய ஆம் ஆத்மி அரசின் முக்கிய முன்னெடுப்புகளில் ஒன்றாக ஆகஸ்ட் 2020இல் தொடங்கப்பட்ட மின்சார வாகனக் கொள்கையானது, வாகன மாசுபாட்டைக் கையாள்வதையும், தில்லியில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்தக் கொள்கையின் ஆரம்ப மூன்றாண்டு காலக்கெடு ஆகஸ்ட் 2023-இல் முடிவடைந்தது, அதன் பிறகு அரசு அதை நீட்டித்து வருவது குறிப்பிடத்தக்கது.