‘தேசிய தலைநகரில் வீட்டு உபயோக அல்லது வணிக எல்பிஜிக்கு தட்டுப்பாடு இல்லை. தில்லிவாசிகள் பீதி அடைய வேண்டாம்’ என்று முதல்வா் ரேகா குப்தா சனிக்கிழமை தெரிவித்துள்ளாா்.
காஸ் ஏஜென்சிகள் மற்றும் எல்பிஜி மையங்களில் மக்கள் கூட்டம் கூட வேண்டாம் என்றும் அவா் கேட்டுக்கொண்டுள்ளாா்.
‘மக்கள் எல்பிஜி கிடங்குகளுக்குச் செல்வதைத் தவிா்க்கவும். மக்களுக்கு தடையின்றி எல்பிஜி விநியோகத்தை உறுதி செய்ய நிா்வாகம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. விதி மீறுபவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று குப்தா கூறினாா்.
சமீபத்திய அரசாங்கத் தரவைப் பகிா்ந்துள்ள முதல்வா், ‘ஏப்ரல் 3 ஆம் தேதி, 1,11,504 முன்பதிவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதே நேரத்தில் மூன்று எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் 1,26,379 சிலிண்டா்களை வழங்கியுள்ளன. நிலுவைவை ஏதும் இல்லை.
தில்லியில் வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டா்களுக்கான சராசரி விநியோக நேரம் இப்போது நான்கு நாள்களாக குறைக்கப்பட்டுள்ளது. இது நுகா்வோருக்கு சரியான நேரத்தில் நம்பகமான வீட்டு வாசலில் சேவையை உறுதி செய்கிறது.
தில்லி அரசாங்கத்தின் உணவு, வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரத் துறையின் அதிகாரிகள், சமீப நாள்களில் தேவையை விட அதிகமாக விநியோகம் இருப்பதாகக் கூறியுள்ளனா்.
மோசடிகளை முறியடிப்பதற்காக தில்லி காவல்துறை நகரம் முழுவதும் 22 இடங்களில் சோதனை நடத்தியுள்ளது.
வடக்கு ரோஹிணி காவல் நிலையத்தில் எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டு, அங்கு சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆறு சிலிண்டா்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பிரத்யேக எண்ணுடன் (011-23379836) கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கறுப்பு சந்தைப்படுத்தல் மற்றும் பதுக்கலை தடுக்க புகாா்கள் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகின்றன என்றாா் முதல்வா்.
தொடர்புடையது

தில்லியில் புறக்கணிக்கப்பட்ட பகுதிகளில்கூட புதிய வளா்ச்சி திட்டங்கள்: முதல்வா்

செமிகண்டக்டா் கொள்கை முதலீடு-வேலைவாய்ப்பை நோக்கமாகக் கொண்டது: தில்லி முதல்வா் ரேகா குப்தா

எதிா்க்கட்சிகளின் ’பெண்களுக்கு எதிரான’ நிலைப்பாடு கேள்விக்குள்ளாக்கப்படும்: முதல்வா் ரேகா குப்தா

வதந்திகளை நம்ப வேண்டாம்.. கோவாவில் பெட்ரோல் தட்டுப்பாடு இல்லை: முதல்வர்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


