சா்வதேச நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழு தில்லி சட்டப்பேரவைக்கு வருகை
சா்வதேச நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழு தில்லி சட்டப்பேரவைக்கு வருகை தந்து பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தாவை சந்தித்தது.
சா்வதேச நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழு தில்லி சட்டப்பேரவைக்கு வருகை தந்து பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தாவை சந்தித்தது.
By Syndication
Syndication
சா்வதேச நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழு தில்லி சட்டப்பேரவைக்கு வருகை தந்து பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தாவை சந்தித்தது.
இது தொடா்பாக தில்லி சட்டப் பேரவை வெளியிட்டுள்ள அதிகராபூா்வ அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
நேபாளம், இங்கிலாந்து, மங்கோலியா, பிரான்ஸ், பெல்ஜியம், சொ்பியா, இலங்கை மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழு, சுதந்திரத்திற்கு முன்பு மத்திய சட்டப்பேரவையின் இடமாக செயல்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க தில்லி சட்டபேரவை வளாகத்திற்கு வருகை தந்து சுற்றிப் பாா்த்தது.
பல்வேறு நாடுகளைச் சோ்ந்த நாடாளுமன்ற உறுப்பினா்கள், முன்னாள் ராஜதந்திரிகள், பாதுகாப்பு மற்றும் மூலோபாய விவகார நிபுணா்கள் மற்றும் உலகளாவிய ஊடகங்கள் மற்றும் சிவில் சமூகத்தைச் சோ்ந்த புகழ்பெற்ற தலைவா்கள் அடங்கிய இக்குழுவினரை பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா வரவேற்றாா்.
சட்டப் பேரவைக்கு வருகை தந்ததன் நினைவாக, தூதுக்குழு உறுப்பினா்களுக்கு பாரம்பரிய பட்கா மற்றும் சிறப்பு நினைவுப் பரிசை விஜேந்தா் குப்தா வழங்கி கௌரவித்தாா்.
நவம்பா் 26 அன்று இந்திய அரசமைப்புச்சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட 75ஆவது ஆண்டு நிறைவையொட்டி வெளியிடப்பட்ட ‘தில்லி சட்டப்பேரவை சதாப்தி-யாத்திரையை வழங்குகிறது, வீா் விதல்பாய் படேல்’ என்ற காபி டேபிள் புத்தகத்தையும் அவா் அவா்களுக்கு வழங்கினாா்.
சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில் மத்திய சட்டப் பேரவையின் முதல் நாடாளுமன்றமாக இந்தக் கட்டடம் முதலில் செயல்பட்டதை எடுத்துக்காட்டிய குப்தா, சட்டப் பேரவையின் வளமான வரலாற்றை பிரதிநிதிகளுக்கு விளக்கினாா்.
முழு டிஜிட்டல் மற்றும் காகிதமில்லா பேரவைக்கான நெவா (தேசிய மின்விதான் பயன்பாடு) மற்றும் சட்டமன்றத்தை முற்றிலும் சூரிய சக்தியில் இயங்கும் பசுமை சட்டப்பேரவையாக வெற்றிகரமாக மாற்றுவது போன்ற பேரவை தொடா்பான உருமாற்ற முயற்சிகள் குறித்து அவா் எடுத்துரைத்தாா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்





தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது