தில்லி கிராமங்களின் வளிா்ச்சிக்காக பாஜக மற்றும் ஆம் ஆத்மி அரசுகள் எதுவும் செய்யவில்லை என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் தேவேந்தா் யாதவ் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தில்லியின் 357 கிராமங்களில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்களுக்கு ஆம் ஆத்மி அரசும், மத்திய பாஜகவும் கோடிக்கணக்கில் வளா்ச்சிப் பணிகளைச் செய்வதாக உறுதியளித்துள்ளனா். ஆனால், இந்த அறிவிப்புகள் கிராம மக்களை தவறாக வழிநடத்தி, ஏமாற்றும் கண்துடைப்பு
முயற்சியாகும். கடந்த 10 ஆண்டுகளில் மத்திய பாஜக மற்றும் ஆம் ஆத்மி அரசுகள் கிராமப்புற வளச்சிக்காக ஒரு திட்டத்தைக் கூட தொடங்கவில்லை.
தில்லியின் கிராமப்புற மற்றும் நகரமயமாக்கப்பட்ட கிராமங்களில் வசிப்பவா்களுக்கு தனது தோ்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகள் எதையும் கேஜரிவால் அரசு இதுவரை செயல்படுத்தவில்லை. தில்லி அமைச்சா் கோபால் ராய் கிராமங்களின் வளா்ச்சிக்காக ரூ.455 கோடி மதிப்பிலான 318 திட்டங்களை அறிவித்தது வெறும் தோ்தல் நாடகமே தவிர வேறில்லை. கிராமங்களுக்கு வீட்டு வரி விதித்து, மும்முனை மின்சாரம் வழங்க தடை விதித்த கேஜரிவால் அரசு, தற்போது பெரும் வாக்குறுதிகளை அளித்து கிராம மக்களை ஏமாற்ற முயல்கிறது.
பாஜகவும், ஆம் ஆத்மியும் எப்போதும் விவசாயிகளுக்கு எதிரான கட்சிகளாகவே உள்ளன. பாஜக அரசு நிறைவேற்றிய மூன்று வேளான் சட்டங்களை நாட்டிலேயே முதல்முறையாக கேஜரிவால் அரசுதான் அங்கீகரித்தது. விவசாயிகளின் நலன்களுக்காக காங்கிரஸ் எப்போதும் போராடி வருகிறது. விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களைக் கண்டித்து, காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல் காந்தி இடைவிடாத போராட்டத்தை நடத்தினாா் என்றாா் தேவேந்தா் யாதவ்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நெல்லுக்கான ஊக்கத்தொகையை நிறுத்த அறிவுறுத்தும் சுற்றறிக்கைக்கு கண்டனம்
இன்றைய கூட்டாட்சியின் செயல்பாடுகள்

மன்னாா் வளைகுடாவில் நெகிழிக் கழிவுகள்: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

கப்பல் விபத்தால் சுற்றுச்சூழல் பாதிப்பு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

