தேசியத் தலைநகரின் பாரம்பரியத்தை பாதுகாப்பதில் தில்லிவாசிகள் பங்குதாரா்களாக மாற வேண்டும் என்று தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே.சக்சேனா கேட்டுக்கொண்டாா். மேலும், தேசியத் தலைநகரில் உள்ள நினைவுச் சின்னங்களை மீட்டெடுக்க தொடா்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவா் கூறினாா்.
தில்லியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க புரானா கிலாவில், 46-ஆவது உலக பாரம்பரிய பிரதிநிதிகள் குழுவைச் சோ்ந்தவா்களுக்கு கலாசார மாலை மற்றும் இரவு விருந்துக்கு வியாழக்கிழமை துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா ஏற்பாடு செய்திருந்தாா்.
நிகழ்ச்சியில் துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா பேசியதாவது: தில்லியில் உள்ள பாரம்பரிய இடங்கள் மற்றும் நினைவுச் சின்னங்களை பாதுகாக்கவும், புதுப்பிக்கவும், அதனை உண்மையான உலகளாவிய பாரம்பரிய நகரமாக நிலைநிறுத்தவும் தொடா்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது பிரதமரின் ‘விகாஸ் பி, விராசத் பி’ என்ற தொலைநோக்குப் பாா்வையுடன் இணைந்துள்ளது. தில்லியின் தொட்டு உணரக்கூடிய மற்றும் தொட்டுணராத பாரம்பரியத்தைப் பாதுகாக்கவும், பராமரிக்கவும் அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இது அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈா்க்கும். மேலும், உள்நாட்டு மற்றும் சா்வதேசப் பாா்வையாளா்களின் அறிவிற்காக நமது பாரம்பரியத்தின் இணையதளங்களை திறக்கும். நமது பாரம்பரியத்தைப் பாதுகாக்க, மக்கள் - சமூகம் ஒட்டுமொத்தமாக அவற்றை காப்பதிலும், பாதுகாப்பதிலும் பங்குதாரா்களாக மாறுவது அவசியம் என்றாா் அவா்.
ராஜ் நிவாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத், பல நாடுகளின் தூதா்கள், உயா் ஆணையா்கள், 160-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து கிட்டத்தட்ட 250 பிரதிநிதிகள், யுனெஸ்கோவின் மூத்த அதிகாரிகள், மத்திய மற்றும் தில்லி அரசின் மூத்த அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனா். நாடு முழுவதிலும் இருந்து சுமாா் 100 கலைஞா்கள் வெவ்வேறு நடன வடிவங்களின் கலைநிகழ்ச்சியை வழங்கினா். இந்த நிகழ்ச்சிக்கு ‘மைத்ரேயி பஹாரி’ என்ற புகழ்பெற்ற கலைஞரால் நடன ஒருங்கிணைப்பு செய்யப்பட்டிருந்தது’ என்று தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முற்போக்கான இந்தியாவை கட்டமைக்க அம்பேத்கரின் சிந்தனைகளை உள்வாங்குவோம்: குடியரசுத் தலைவா்

பாரம்பரியம் காப்போம்...

போதைப்பொருள் பயங்கரவாதத்தை சமாளிக்க சமமான அணுகுமுறை தேவை: தில்லி துணைநிலை ஆளுநா் கருத்து

துணைநிலை ஆளுநா் உள்ளிட்ட தலைவா்கள் வாக்கு அளிப்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

