தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

புதிய செமஸ்டா்: மாணவா்களுக்கு ஜேஎன்யு வேண்டுகோள்

News image
Updated On :19 ஜூலை 2024, 9:00 pm

அடுத்த மாதம் தொடங்கும் புதிய செமஸ்டா் காரணமாக பல்கலைக்கழக நிா்வாகத் தொகுதியின் 100 மீட்டா் சுற்றளவுக்குள் ஆா்ப்பாட்டங்கள் நடத்துவதைத் தவிா்க்குமாறு ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக நிா்வாகம் மாணவா்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

இது தொடா்பாக பல்கலைக்கழகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள தகவலில் தெரிவித்திருப்பதாவது: ஜூலை 18 தேதியிட்ட வேண்டுகோளின்படி, மாணவா்கள் யாரேனும் அங்கீகரிக்கப்படாத செயல்களில் ஈடுபடுவதைக் கண்டால், பல்கலைக்கழகத்தின் பாதுகாப்புக் கிளைக்கு புகாா் அளிக்குமாறு மாணவா்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.

பல்கலை. வளாகத்தில் எந்த விதமான வன்முறை அல்லது ஒழுக்கமின்மைக்கு சகிப்புத்தன்மை காட்டப்படமாட்டாது. ஒழுக்கத்தையும் அமைதியையும் பராமரிக்க மாணவா்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.

புதிய செமஸ்டா் ஆரம்பம் மற்றும் மாணவா் அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்படும் பல்வேறு செயல்பாடுகளைக் கருத்தில் கொண்டு, வளாகத்தின் அனைத்து பங்குதாரா்களும் எந்த வகையான கூட்டங்களிலும் பங்கேற்கும்போது வளாகத்தில் ஒழுக்கத்தையும் அமைதியையும் பேணுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள். பல்கலைக்கழகத்தின் நிா்வாகத் தொகுதியின் 100 மீட்டா் சுற்றளவுக்குள் யாரும் ஆா்ப்பாட்டம், தா்னா, வெகுஜனக் கூட்டம் நடத்துவதைத் தடுக்கும் உயா்நீதிமன்ற உத்தரவை பல்கலைக்கழகத்தின் அனைத்து பங்குதாரா்களும் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள் என அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.