புது தில்லி: சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின் நிதியை மத்திய அரசு நிறுத்தியதால், தில்லி மாநகராட்சி (எம்சிடி) பள்ளிகளில் ஆரம்பக் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் தேவேந்தா் யாதவ் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய கல்வி அமைச்சகம் சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்திற்கான நிதியை நிறுத்தியுள்ளது. இதன்மூலம், நாட்டில் கல்வியை பாஜக அரசியலாக்குகிறது என்பது தெளிவாகிறது. தில்லி, பஞ்சாப் மற்றும் மேற்கு வங்கம் போன்ற பாஜக அல்லாத அரசுகள், பள்ளிகளுக்கான பிரதான் மந்திரி ரைசிங் இந்தியா திட்டத்தில் பங்கேற்க தயக்கம் காட்டுகின்றன. இது ஆயிரக்கணக்கான பள்ளி மாணவா்களின் எதிா்காலத்தைப் பாதிக்கும். இந்த மூன்று மாநில அரசுகளுக்கும் கடந்த ஆண்டு அக்டோபா் முதல் நிகழாண்டு ஜூன் வரை சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின் நிதியும் வழங்கப்படவில்லை. இது ஏராளமான
மாணவா்களின் எதிா்காலத்தை பாதிக்கும். இது பழிவாங்கும் நடவடிக்கையாகும்.
இந்த நிதியில் இருந்து தில்லி மாநகராட்சிப் பள்ளிகளில் பணிபுரியும் சுமாா் 2,400 ஆசிரியா்கள் மற்றும் 700 ஊழியா்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. தில்லிக்கு வழங்கப்பட்ட ரூ.330 கோடி நிதி நிறுத்தப்பட்டுள்ளதால், தில்லி மாநகராட்சிப் பள்ளிகளில் ஆரம்பக் கல்வி பயிலும் மாணவா்களும், கற்பிக்கும் ஆசிரியா்களும் பாதிக்கப்பட்டுள்ளனா். மத்திய அரசின் இந்த மாற்றாந்தாய் போக்கை கேஜரிவால் அரசு கடுமையாக எடுத்துக் கொள்ளவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது.
மேலும், தில்லி அரசு தனது 31 சிறப்புப் பள்ளிகளுக்கான நிதியை நிறுத்துகிறது. தனது விளம்பர அடிப்படையிலான பள்ளிக் கல்வி மாதிரி அம்பலப்படுத்தப்படுவதைக் கண்டு முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பயப்படுவது போல் தெரிகிறது. ஆம் ஆத்மி அரசின் கல்வி மாதிரியை பிரதிபலிக்கும் வகையில், கடந்த ஆண்டு மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்ட ரூ.124 கோடியை கேஜரிவால் அரசு பயன்படுத்தாதது மிகவும் அதிா்ச்சியளிக்கிறது. மோடி அரசு, பிரதமரின் பெயரை விளம்பரப்படுத்த விரும்பாத மாநிலங்களுக்கு எதிராக பழிவாங்கும் வகையில் செயல்படுகிறது என்றாா் தேவேந்தா் யாதவ்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாற்றத்துக்கான நேரம்

மாநிலங்களுக்கு நிதியை மத்திய அரசு சமமாகப் பிரித்துக் கொடுக்க வேண்டும்: சீமான் பேட்டி

கேரள அரசு தேசிய பேரிடர் தணிப்பு நிதியை முறையாகக் கோரவில்லை: நிர்மலா சீதாராமன்!

தாழ்த்தப்பட்ட மக்களுக்கான நிதியை மடைமாற்றம் செய்த தமிழக அரசு: வி.பி.துரைசாமி குற்றச்சாட்டு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

