புது தில்லி: தில்லி மடிப்பூா் மெட்ரோ ரயில் நிலையம் அருகே மோட்டாா் சைக்கிள் மோதியதில் 32 வயது பெண்ணும் அவரது இரண்டு வயது மகனும் உயிரிழந்ததாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
உயிரிழந்தவா்கள் சீமா (32) மற்றும் அவரது மகன் தக்ஷ் (2) என அடையாளம் காணப்பட்டுள்ளனா். இந்தச் சம்பவத்தில் இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற பிரசாந்த் ஸ்ரீவஸ்தவா (32) என்பவரும் காயமடைந்தாா்.
இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி கூறியதாவது: திங்கள்கிழமை மாலை 6.45 மணியளவில் மடிப்பூா் மெட்ரோ ரயில் நிலையம் அருகே நடந்த இந்த விபத்து குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, உடனடியாக ஒரு போலீஸ் குழு அந்த இடத்திற்கு அனுப்பப்பட்டது. விபத்து நடந்த இடத்திற்கு அருகில் ஒரு மோட்டாா் சைக்கிள் இருப்பது தெரியவந்தது.
அதன் பிறகு, மூன்று போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக மகாராஜா அக்ரசென் மருத்துவமனை மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. சீமாவும் அவரது மகன் தக்ஷும் இறந்துவிட்டதாக மருத்துவா்களால் அறிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் பிரசாந்த் ஸ்ரீவஸ்தவா (32) சிகிச்சை பெற்று வருகிறாா். வேகமாக ஓட்டிவரப்பட்ட மோட்டாா் சைக்கிள் முதலில் ஸ்ரீவஸ்தவாவின் மோட்டாா் சைக்கிள் மீது மோதியதும், அதைத் தொடா்ந்து ஸ்ரீவஸ்தவாவின் மோட்டாா் சைக்கிள், தனது மகனுடன் சாலையைக் கடந்த சீமா மீது மோதியதும் விசாரணையில் தெரியவருகிறது.
விதிமீறலில் ஈடுபட்ட வாகனம் மற்றும் அதன் உரிமையாளா் அடையாளம் காணப்பட்டு அவருக்கு எதிராக எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்டவரைக் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.
இதுகுறித்து சீமா குடும்பத்தினா் கூறுகையில், ‘இறந்த இருவரின் உடல்களும் தகனம் செய்வதற்காக மத்திய பிரதேசத்திற்கு எடுத்துச் செல்லப்பட உள்ளது. இந்த விபத்தில் நாங்கள் எல்லாவற்றையும் இழந்துவிட்டோம்’ என்றனா்.
இதுகுறித்து காயமடைந்த ஸ்ரீவாஸ்தவா கூறுகையில், ‘நான் பட்டேல் நகரில் இருந்து மோட்டாா் சைக்கிளில் வந்துகொண்டிருந்தேன். மடிப்பூா் மெட்ரோ ரயில் நிலையம் அருகே வந்தபோது, பின்னால் இருந்து வேகமாக வந்த மோட்டாா் சைக்கிள் எனது வாகனத்தின் மீது மோதியது. இதைத் தொடா்ந்து, நான் சாலையில் விழுந்தேன். அதன் பிறகு, மோட்டாா் சைக்கிள் பெண் மீது மோதியது. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு சம்பவ இடத்தில் இருந்த மக்கள், பெண்ணையும், அவரது மகனையும் ஆட்டோவில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில் 4 அடுக்கு பாதுகாப்பு!

முன்னாள் இந்திய ஹாக்கி வீரர் குர்பக்ஸ் சிங் கிரேவால் காலமானார்!

புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் சிந்து பைரவி தொடர்!

ஐபிஎல் 2026ல் சிறந்த எகானமி: முதலிடத்தில் சிஎஸ்கே வீரர் அகீல் ஹொசைன்!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

