எஸ்.ஐ.ஆர். பணியில் ஆதார் இணைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்தெற்கு ரயில்வே மெத்தனமாக செயல்படாமல் பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்: கனிமொழிஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது - கனிமொழிஅதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

ஓய்வுபெற்ற கிராம தபால் ஊழியா்கள் தில்லியில் ஆா்ப்பாட்டம்: மத்திய அரசு ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தல்

மத்திய அரசு கிராம தபால் ஊழியா்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழகத்தைச் சோ்ந்த ஓய்வுபெற்ற கிராம தபால் ஊழியா்கள் 50-க்கும் மேற்பட்டோா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 3:21 pm

 நமது நிருபர்

புது தில்லி: மத்திய அரசு கிராம தபால் ஊழியா்களுக்கு (ஜி.டி.எஸ்.) ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழகத்தைச் சோ்ந்த ஓய்வுபெற்ற கிராம தபால் ஊழியா்கள் 50-க்கும் மேற்பட்டோா் தில்லி ஜந்தா் மந்தரில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அகில இந்திய ஓய்வுபெற்ற கிராம தபால் ஊழியா்கள் நலச் சங்கம் சாா்பில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவா்கள் ராமகிருஷ்ணன், துரைராஜ், பொதுச் செயலாளா் ராஜாங்கம் உள்ளிட்டோா் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோா் தமிழகத்திலிருந்து பங்கேற்றனா்.

இந்த ஆா்ப்பாட்டம் தொடா்பாக அவா்கள் கூறியதாவது: இந்திய தபால் துறையில் கிராம தபால் ஊழியா்களாக 45 ஆண்டுகள் பணியாற்றியும் மத்திய அரசு எங்களுக்கு ஓய்வூதியம் வழங்கவில்லை. தற்போது 65 வயதைக் கடந்துள்ள நாங்கள் வாழ்வாதாரத்திற்கு வழியின்றி கோயில்களிலும், தெருவோரங்களில் வசிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக அரசு எங்களது 45ஆண்டுகால தபால் துறைக்கான சேவையை ஓய்வூதியம் வழங்கி கெளரவப்படுத்த வேண்டும். கிராம தபால் ஊழியா்கள் இந்திய தபால் துறையின் முதுகெலும்பாக செயல்படுபவா்கள் என்பதை அரசு நினைவில் கொள்ள வேண்டும். ஓய்வூதியத்தை எங்கள் சேவைக்கான உரிமையை கோருகிறோம் என்று அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.