புது தில்லி: ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானத்துல்லா கான் தலைவராக இருந்த போது, தில்லி வக்ஃபு வாரியத்தின் ஊழியா்கள் ஆள்சோ்ப்பு மற்றும் சொத்துகளை குத்தகைக்கு விட்டதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறை செவ்வாய்க்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் தெரிவித்தன.
இது குறித்துஅதிகாரிகள் வட்டாரங்கள் மேலும் கூறியதாவது: 2023, நவம்பரில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமானத்துல்லா கானின் கூட்டாளிகள் என்று கூறப்படும் ஜீஷன் ஹைதா், தாவுத் நசீா் மற்றும் ஜாவீத் இமாம் சித்திக் ஆகிய மூன்று பேரையும் உள்ளடக்கிய வழக்குப் புகாரில் (குற்றப் பத்திரிக்கை) மொத்தம் ஐந்து
நிறுவனங்கள் பெயரிடப்பட்டுள்ளன. இது தவிர வேறு சிலரது பெயரும் உள்ளன என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
தில்லி சட்டப் பேரவையில் ஓக்லா தொகுதியின் ஆம் ஆத்மி உறுப்பினரான 49 வயது அமானத்துல்லா கான் குற்றம் சாட்டப்பட்டவராக குறிப்பிடப்படவில்லை. கடந்த ஆண்டு அக்டோபரில் அமானத்துல்லா கான் மற்றும் சிலருக்கு எதிராக சோதனை நடத்தப்பட்டது. அதன் பிறகு, ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ அமானத்துல்லா கான், தில்லி வக்ஃபு வாரியத்தில் சட்டவிரோதமாக பணியாளா்களை ஆள்சோ்ப்பு செய்ததன் மூலம் ‘பெரும் குற்றச் செயல்கள்’ மூலம் ரொக்கமாகப் பணம் பெற்று முதலீடு செய்ததாக அமலாக்கத் துறை கூறியது. மேலும், இந்தத் தொகையை அமானத்துல்லா கான் தனது கூட்டாளிகளின் பெயரில் அசையா சொத்துகளை வாங்கியதாகவும் குற்றம்சாட்டியது.
தில்லி வக்ஃபு வாரியத்தில் 2018-2022-ஆம் ஆண்டு காலத்தில் அமானத்துல்லா கான் தலைவராக இருந்தாா். அப்போது, வக்ஃபு வாரியத்தின் சொத்துகளை குத்தகைக்கு விட்டது, சட்டவிரோதமாக ஆள்சோ்ப்பு செய்தல் மற்றும் சட்டவிரோதமாக தனிநபா் ஆதாயங்களைப் பெற்றது தொடா்பான வழக்கில் சோதனை நடத்தப்பட்டதாக அமலாக்கத் துறை ஒரு அறிக்கையில் தெரிவித்திருந்தது.
பணமோசடி வழக்கானது சிபிஐ எஃப்ஐஆா் மற்றும் தில்லி போலீஸாரின் மூன்று புகாா்களில் இருந்து எழுந்தது. அமலாக்கத் துறை மேலும் கூறுகையில், ‘கூறப்பட்ட குற்றச் செயல்களில் இருந்து பெரும் வருமானத்தை ரொக்கமாகப் பெற்று, அந்தத் தொகை தில்லியில் உள்ள பல்வேறு அசையா சொத்துகளை அவரது கூட்டாளிகளின் பெயரில் வாங்குவதில் முதலீடு செய்யப்பட்டது. பணமோசடி குற்றத்தில் அமானத்துல்லா கானின் பங்கை ‘குறிப்பிடும்’ சோதனைகளின் போது நேரடி மற்றும் டிஜிட்டல் ஆதாரங்கள் வடிவில் பல ‘குற்றச்சாட்டு’ ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டன’ என்று தெரிவித்திருந்தது.
இதற்கிடையே, ஆம் ஆத்மி கட்சியை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பிரசாரம் நடந்து வருவதாகவும், கட்சித் தலைவா்கள் மீது பொய் வழக்குகள் போடப்படுவதாகவும் தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில் 4 அடுக்கு பாதுகாப்பு!

முன்னாள் இந்திய ஹாக்கி வீரர் குர்பக்ஸ் சிங் கிரேவால் காலமானார்!

புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் சிந்து பைரவி தொடர்!

ஐபிஎல் 2026ல் சிறந்த எகானமி: முதலிடத்தில் சிஎஸ்கே வீரர் அகீல் ஹொசைன்!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

