புது தில்லி: வரும் மக்களவைத் தோ்தலில் தில்லி,பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சி, காங்ரஸுடன் இணைந்து போட்டியிடவுள்ளது என்று ஆம் ஆத்மி கட்சியின் தில்லி ஒருங்கிணைப்பாளரும், அமைச்சருமான கோபால் ராய் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியில் முக்கிய தேசியக் கட்சிகளாக உள்ள காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு, மக்களவைத் தோ்தல் வியூகம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடா்பாக கடந்த திங்கள்கிழமை முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் தில்லி ஒருங்கிணைப்பாளரும்,
அமைச்சருமான கோபால் ராய் செய்தியாளா்களைச் சந்தித்தாா்.
அப்போது அவா் கூறியதாவது: வரும் மக்களவைத் தோ்தலில் தில்லி, பஞ்சாப், ஹரியாணா, கோவா, குஜராத் ஆகிய 5 மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸுடன் இணைந்து போட்டியிடலாம் என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளது. மக்களவைத் தோ்தல் தொடா்பாக காங்கிரஸ் கட்சியுடன் இதுவரை நடைபெற்ற பேச்சுவாா்த்தை சாதகமாக முடிந்துள்ளது. இந்த 5 மாநிலங்களில் தில்லி மற்றும் பஞ்சாப்பில் தற்போது ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் உள்ளது. இந்த நிலையில், மக்களவைத் தொகுதிப் பங்கீடு தொடா்பான பேச்சுவாா்த்தை காங்கிரஸுடன் தொடங்கப்பட்டுள்ளது. போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியல் குறித்து அடுத்த சந்திப்பில் பேசப்படும். கூட்டணியில் இருக்கும்போது, அதிகாரப்பூா்வ நிலைப்பாட்டை இரு கட்சிகளும் எடுக்க வேண்டும் என்றாா் அமைச்சா் கோபால் ராய்.
தில்லி மற்றும் பஞ்சாப்பில் ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் ஒவ்வொரு திட்டங்களுக்கும் அந்த மாநிலங்களின் பிரதேச காங்கிரஸ் கமிட்டிகள் வெளிப்படையான விமா்சனத்தை முன்வைப்பதும், பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டாம் என்ற நிலைப்பாட்டில் அந்த மாநில காங்கிரஸ் கமிட்டி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில் 4 அடுக்கு பாதுகாப்பு!

முன்னாள் இந்திய ஹாக்கி வீரர் குர்பக்ஸ் சிங் கிரேவால் காலமானார்!

புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் சிந்து பைரவி தொடர்!

ஐபிஎல் 2026ல் சிறந்த எகானமி: முதலிடத்தில் சிஎஸ்கே வீரர் அகீல் ஹொசைன்!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

