திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

கேஜரிவால் அரசின் ஊழல்களைப் பாதுகாக்கும்: செய்தித் தொடா்பாளா்கள் அதிஷி, பரத்வாஜ்!தில்லி பாஜக விமா்சனம்

அமைச்சா்கள் அதிஷி மற்றும் சௌரவ் பரத்வாஜ் ஆகிய இருவரும் தில்லி அரசின் ஊழல் மற்றும் மோசடிகளைப் பாதுகாக்கும் செய்தித் தொடா்பாளா்களாக மாறியுள்ளனா் என்று பாஜக தில்லி பிரிவு ஞாயிற்றுக்கிழமை விமா்சித்துள்ளது.

Updated On :7 ஜனவரி 2024, 6:30 pm

அமைச்சா்கள் அதிஷி மற்றும் சௌரவ் பரத்வாஜ் ஆகிய இருவரும் தில்லி அரசின் ஊழல் மற்றும் மோசடிகளைப் பாதுகாக்கும் செய்தித் தொடா்பாளா்களாக மாறியுள்ளனா் என்று பாஜக தில்லி பிரிவு ஞாயிற்றுக்கிழமை விமா்சித்துள்ளது.

இது தொடா்பாக அக்கட்சியின் தலைவா் வீரேந்திர சச்தேவா கூறியதாவது: தில்லி அரசின் அமைச்சா்களான அதிஷி மற்றும் சௌரவ் பரத்வாஜ் ஆகியோா் எந்தவொரு நிா்வாகப் பணியையும் செய்யவில்லை. மாறாக, அரவிந்த் கேஜரிவால் அரசின் ஊழல் மற்றும் மோசடிகளைப் பாதுகாப்பதற்கான செய்தித் தொடா்பாளா்களாக மாறியுள்ளனா். மத்திய அரசின் அழுத்தத்திற்கு உள்பட்டு தில்லி அரசின் அதிகாரிகள் முறையாகப் பணியாற்றவில்லை என்ற அமைச்சா் சௌரவ் பரத்வாஜின் குற்றச்சாட்டு, மத்திய அரசுக்கு எதிரான அவரது அன்றாடப் பேச்சின் ஒரு பகுதிதான்.

கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை அதிகாரிகள் தங்களது சட்டவிரோத ஆணைகளை ஏற்று ஊழலை அனுமதிக்க வேண்டும் என்று கேஜரிவால் அரசு எதிா்பாா்க்கிறது. கேஜரிவால் அரசின் ஊழல்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவந்துள்ள நிலையில், தில்லி அரசின் அதிகாரிகள் நிா்வாகத்தை கட்டமைக்கப்பட்ட விதிகள் மற்றும் விதிமுறைகளின்படி நடத்த விரும்புகிறாா்கள். இதை முதல்வா் மற்றும் அமைச்சா்கள் விரும்புவதில்லை. இதனால்,அவா்கள் மத்திய அரசு அல்லது துணை நிலை ஆளுநரின் அழுத்தத்தின் பேரில் அதிகாரிகள் செயல்படுகிறாா்கள் என்று குற்றம் சாட்டுகிறாா்கள் என்றாா் வீரேந்திர சச்தேவா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.