வரும் மக்களவையில் தேர்தலில் மீனவர்கள் சமுதாயம் போட்டியிடும் வகையில், காங்கிரஸ் 10 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என தில்லியில் நடைபெற்ற அகில இந்திய மீனவர் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அகில இந்திய மீனவர் காங்கிரஸின் தேசிய செயற்குழுக் கூட்டம் தில்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு இந்த அமைப்பின் தேசியத் தலைவர் எஸ்.ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ தலைமை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான கே.ராஜூ கலந்துகொண்டார். மேலும், நாடு முழுவதும் இருந்து மீனவர் காங்கிரஸின் தேசிய மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்துக்குப் பிறகு "தினமணி'யிடம் தேசியத் தலைவர் எஸ்.ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ கூறியதாவது:
இந்தக் கூட்டத்தில் வருகிற 14}ஆம் தேதி மணிப்பூர் முதல் மும்பை வரை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மேற்கொள்ளும் "பாரத ஒற்றுமை நீதி யாத்திரை'யை சிறப்பாக நடத்துவது குறித்தும், இந்த நடைப்பயணத்தில் மீனவர் சமுதாய மக்களை எவ்வாறு ஈடுபடுத்துவது, நடைப்பயணம் செல்லும் மாநிலங்களில் அந்தந்த மாநில நிர்வாகிகள் எவ்வாறு வரவேற்பு அளிப்பது ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த நடைப்பயணத்தின்போது மீனவர் சமுதாயத்தினுருடன் கலந்துரையாடவும் அவர்களது பிரச்னையை எடுத்துரைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று, காங்கிரஸ் அறிவித்துள்ள நன்கொடை வழங்கும் திட்டத்தில் ஒவ்வொரு மாநிலத்திலும் மீனவர் காங்கிரஸýம் குறைந்தபட்சம் 1,000 பேர் நன்கொடை அளிப்பது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், தேசிய நிர்வாகிள், மாநில நிர்வாகள் அதிகத் தொகையை வழங்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
"2024' மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் அதன் கூட்டணி சார்பில் நிறுத்தப்படும் அனைத்து வேட்பாளர்களையும் வெற்றிபெறச் செய்ய ஒருங்கிணைந்து செயல்படுவது, மூத்த தலைவர் ப.சிதம்பரம் தலைமையிலான தேர்தல் அறிக்கை குழுவிடம் இந்தியா முழுவதும் மீனவர்கள் எதிர்கொண்டு வரும் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையிலான வாக்குறுதிகளை வெளியிடும் வகையில் கேட்டுக் கொள்வது, மேலும், இந்தியா முழுவதும் உள்ள மீனவர்களின் நலன் கருதி மீனவர்கள் சமுதாயத்துக்கான கணக்கெடுப்பை நடத்தும் வகையில், தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு வெளியிடக் கோரியும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும், மீனவர் சமுதாயத்துக்கு நாடாளுமன்றத்திலும், சட்டப் பேரவைகளிலும் காங்கிரஸ் சார்பில் பிரதிநிதித்துவம் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. இதனால், வரும் மக்களவைத் தேர்தலில் மீனவர் சமுதாயம் அதிகம் உள்ள வாக்காளர்கள் பகுதிகளில் குறைந்தபட்சம் 10 தொகுதிகளை மீனவர் சமுதாயத்துக்கு காங்கிரஸ் சார்பில் ஒதுக்க வேண்டும் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில் 4 அடுக்கு பாதுகாப்பு!

முன்னாள் இந்திய ஹாக்கி வீரர் குர்பக்ஸ் சிங் கிரேவால் காலமானார்!

புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் சிந்து பைரவி தொடர்!

ஐபிஎல் 2026ல் சிறந்த எகானமி: முதலிடத்தில் சிஎஸ்கே வீரர் அகீல் ஹொசைன்!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

