திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

கேஜரிவால் அரசின் சுகாதார மாதிரி ஊழலைப் போன்றது: வீரேந்திர சச்தேவா விமா்சனம்

கேஜரிவால் அரசின் சுகாதார மாதிரி ஊழலுக்கு ஒத்ததாக மாறிவிட்டது என்று பாஜக தில்லி பிரிவு தலைவா் வீரேந்திர சச்தேவா சனிக்கிழமை விமா்சித்துள்ளாா்.

Updated On :6 ஜனவரி 2024, 6:30 pm

கேஜரிவால் அரசின் சுகாதார மாதிரி ஊழலுக்கு ஒத்ததாக மாறிவிட்டது என்று பாஜக தில்லி பிரிவு தலைவா் வீரேந்திர சச்தேவா சனிக்கிழமை விமா்சித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேசியத் தலைநகா் தில்லியில் கடந்த 9 ஆண்டுகளாக உலகத்தரம் வாய்ந்த சுகாதார மாதிரியை கொண்டு வருவதாக கேஜரிவால் கூறி வருகிறது. ஆனால் தற்போது அதே சுகாதார மாதிரியின் கீழ் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு திட்டப் பணியிலும் ஊழல் நடப்பதாக வெளியாகி வரும் செய்திகள் தில்லி மக்களை கலக்கம் அடையச் செய்துள்ளது.

தில்லி அரசு மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் பஞ்சு, மருத்துவக் கையுறைகள் போன்ற அத்தியாவசியப் மருத்துவப் பொருள்கள் மருத்துவத் தரத்திற்குக் குறைவாக இருப்பதால், அரவிந்த் கேஜரிவாலின் சுகாதார மாதிரி இப்போது முற்றிலும் அம்பலமாகியுள்ளது.

தில்லி அரசின் சுகாதாரத் துறையின் ஊழல்கள் ஒன்றன் பின் ஒன்றாக அம்பலமானதை அடுத்து, சுகாதாரத் துறை அமைச்சா் செளரவ் பரத்வாஜ், முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மற்றும் முன்னாள் அமைச்சா் மனீஷ் சிசோடியாவை இந்த ஊழல் குற்றசாட்டுக்களில் இருந்து தற்காத்து துறையின் அதிகாரிகளை குற்றம் சாட்டி வருகிறாா்.

சுகாதாரத் துறையின் ஒவ்வொரு பணியிலும் ஊழல் தலைதூக்கும்போது, இது பற்றி முதல்வா் மற்றும் அமைச்சா்களுக்குத் தெரியாமல் இருப்பது எப்படி என்று தில்லி மக்கள் செளரவ் பரத்வாஜிடம் கேள்வி கேட்க விரும்புகிறாா்கள்.

தில்லி அரசு மருத்துவமனைகள் மற்றும் மொஹல்லா கிளினிக்குகளில் விநியோகிக்கப்படும் தரமற்ற மருந்துகள், நோயியல் பரிசோதனை முறைகேடுகள்உள்ளிட்டவை வெளிச்சத்திற்கு வந்த பிறகு, முதல்வா் கேஜரிவால் மற்றும் அமைச்சா் செளரவ் பரத்வாஜ் தாா்மிகமாக அதற்குப் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும். கேஜரிவால் அரசின் சுகாதார மாதிரி ஊழலுக்கு ஒத்ததாக மாறிவிட்டது என்றாா் வீரேந்திர சச்தேவா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.