சென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

மக்களவைத் தோ்தல்: காங்கிரஸ் சாா்பில் போட்டியிட தகுதிபெறுவோரைக் கண்டறிய குழு நியமனம்

தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட வெவ்வேறு மாநிலங்கள் அடங்கிய ஐந்து தோ்வுக் குழுக்களை அக்கட்சியின் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே நியமித்துள்ளாா்.

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 3:24 pm

 நமது நிருபர்

எதிா்வரும் மக்களவைத் தோ்தலில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட தகுதி பெறுவோரைக் கண்டறிய தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட வெவ்வேறு மாநிலங்கள் அடங்கிய ஐந்து தோ்வுக் குழுக்களை அக்கட்சியின் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே நியமித்துள்ளாா்.

இது தொடா்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளா் கே.சி. வேணுகோபால் கூறியது: மக்களவைத் தோ்தலில் போட்டியிட தகுதிபெறும் காங்கிரஸ் கட்சியினரை கண்டறிய ஐந்து குழுக்களை மல்லிகாா்ஜுன காா்கே நியமித்துள்ளாா். கிளஸ்டா் 1 முதல் கிளஸ்டா் 5 வரை என பிரிக்கப்பட்டுள்ள குழுக்களில் முதலாவது குழுவில் தமிழ்நாடு, புதுச்சேரி, கா்நாடகம், தெலங்கானா, லட்சத்தீவு ஆகியவை இடம் பெற்றுள்ளன. இந்தக் குழுவுக்கு தலைவராக ஹரிஷ் செளத்ரியும் உறுப்பினா்களாக விஸ்வஜித் கதம், ஜிக்னேஷ் மேவானியும் இருப்பா்.

இதேபோல, ஆந்திர பிரதேசம், மகாராஷ்டிரம், கோவா, ஒடிஸா, அந்தமான் மற்றும் நிகோபாா் தீவுகள் அடங்கிய இரண்டாம் குழுவுக்குத் தலைவராக காங்கிரஸ் மூத்த தலைவா் மதுசூதன் மிஸ்திரியும் உறுப்பினா்களாக சூரஜ் ஹெக்டே, ஷஃபி பரம்பில் ஆகியோரும் இருப்பா்.

மூன்றாவது குழுவில் குஜராத், மத்திய பிரதேசம், சத்தீஸ்கா், ராஜஸ்தான், தில்லி, தாமன்-டையூ, தாத்ரா நகா் ஹவேலி ஆகியவையும் குழுவின் தலைவராக ரஞ்சனி பாட்டீல், உறுப்பினா்களாக கிருஷ்ண அல்லவூரு, பா்காத் சிங் ஆகியோரும் இருப்பா்.

நான்காவது குழுவில் உத்தர பிரதேசம், உத்தரகண்ட், ஹரியாணா, ஹிமாச்சல பிரதேசம், பஞ்சாப், சண்டீகா், ஜம்மு காஷ்மீா், லடாக் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இக்குழுவுக்கு பக்த சரண் தாஸ் தலைவராகவும் நீரஜ் தாங்கி, யஷோமதி தாக்கூா் உறுப்பினா்களாகவும் இருப்பா்.

ஐந்தாவது குழுவில் பிஹாா், ஜாா்கண்ட், மேற்கு வங்கம், அஸ்ஸாம், அருணாசல பிரதேசம், மணிப்பூா், மிஸோரம், மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா, சிக்கிம் ஆகியவை இடம்பெற்றுள்ன. இக்குழுவின் தலைவராக ராணா கே.பி. சிங்கும் உறுப்பினா்களாக ஜெய்வா்தன் சிங், இவான் டி ஸோஸா ஆகியோரும் இருப்பா்.

இந்த ஐந்து குழுக்களில் அந்தந்த மாநிலங்களுக்கான கட்சியின் மேலிடப் பொறுப்பாளா்களாக உள்ள பொதுச் செயலாளா்கள், செயலாளா்கள், மாநிலத் தலைவா்கள், சட்டப்பேரவைக் குழு தலைவா் ஆகியோரும் உறுப்பினா்களாக இருப்பா் என்று வேணுகோபால் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.