சென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

நாடாளுமன்ற பாதுகாப்பு அத்துமீறல் வழக்கு:விடுவிக்க உத்தரவிடக் கோரிய நீலம் ஆசாத் மனு தள்ளுபடி

டிசம்பா் 13 நாடாளுமன்ற பாதுகாப்பு அத்துமீறல் வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் நீலம் ஆசாத், தன்னை போலீஸ் காவலில் வைத்திருப்பது சட்டவிரோதமானது என்று

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 3:25 pm

 நமது நிருபர்

டிசம்பா் 13 நாடாளுமன்ற பாதுகாப்பு அத்துமீறல் வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் நீலம் ஆசாத், தன்னை போலீஸ் காவலில் வைத்திருப்பது சட்டவிரோதமானது என்று கூறி தன்னை விடுவிக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்திருந்த மனுவை தில்லி உயா்நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுரேஷ் குமாா் கைத், மனோஜ் ஜெயின் ஆகியோா் அடங்கிய அமா்வு கூறுகையில், ‘விசாரணை நீதிமன்ற நடவடிக்கைகளின்போது தனக்கு ஆதரவாக வாதாட விரும்பும் வழக்குரைஞரைக் கலந்தாலோசிக்க தாம் அனுமதிக்கப்படவில்லை எனக் கூறி மனுதாரா் தாக்கல் செய்த இந்த மனு பராமரிக்கத்தக்கதல்ல’ என்று தெரிவித்தது.

மேலும், ‘மனுதாரா் ஏற்கெனவே விசாரணை நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளாா். இதனால், தற்போதைய மனு பராமரிக்க முடியாதது. அதன்படி இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என்று நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டது.

ஆசாத்தின் வழக்குரைஞா் வாதிடுகையில், ‘விசாரணை நீதிமன்ற நடவடிக்கைகளின் போது மனுதாரரின் விருப்பப்படி வழக்குரைஞா் ஒருவரைக் கலந்தாலோசிக்க அனுமதிக்கப்படவில்லை. இதனால், அரசியலமைப்பின் விதிகளை மீறி விசாரணை நீதிமன்றம் அவரது காவலை காவல் துறையிடம் வழங்கியுள்ளது. மேலும், அவரை போலீஸ் காவலில் வைக்கும் உத்தரவு உரிய வகையில் ஆய்வு செய்யாமல் நிறைவேற்றப்பட்டுள்ளது.“இதனால், அவரது அடிப்படை உரிமை மீறப்பட்டதாகக் கூறி விடுதலை செய்யக் கோருகிறாா்’ என்று வாதிட்டாா்.

விசாரணையின் போது, ‘மனுதாரரின் அடிப்படை உரிமை மீறல் வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை’என்று உயா்நீதிமன்றம் தெரிவித்தது. மேலும், ‘இது மைதானமாக இருக்க முடியாது. சட்ட உதவி வழக்குரைஞா் இருந்ததற்கு ஏற்ப, விசாரணை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது ... அப்படி எந்த உரிமையும் மீறப்படவில்லை. விசாரணை நீதிமன்றத்திற்குச் செல்லுங்கள். உங்கள் வழக்கு அங்கு நிலுவையில் உள்ளது’ என்று நீதிமன்றம் கூறியது.

தில்லி நகர காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் வாதிடுகையில், ‘சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ) குற்றங்கள் தொடா்பான தற்போதைய எஃப்.ஐ.ஆரில் தன்னை விடுவிக்கக் கோரி நீலம்ஆசாத் ஏற்கனவே ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளதால், இந்த மனு பராமரிக்க முடியாதது. மேலும், அவரது போலீஸ் காவல் ஏற்கெனவே ஜனவரி 5-ஆம் தேதியுடன் முடிவடைகிறது’ என்றாா்.

தன்னை உயா்நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தும்படி ஆள்கொணா்வு உத்தரவை பிறப்பிக்கவும், விடுதலை செய்யவும், தனக்கு விருப்பமான வழக்குரைஞரை அணுக அனுமதிக்காதது தனது அடிப்படை உரிமையை மீறுவதாகும் என்றும் நீலம் ஆசாத் தனது மனுவில் தெரிவித்திருந்தாா். இந்த விவகாரத்தில் நீலம் ஆசாத்தை ஜனவரி 5 வரை போலீஸ் காவலில் வைக்க விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

2001-ஆம் ஆண்டு டிசம்பா் 13-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலின் ஆண்டு நினைவு நாளில் நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அத்துமீறல் நிகழ்ந்தது.

சாகா் சா்மா மற்றும் மனோரஞ்சன் ஆகியோா் நாடாளுமன்றத்தில் பூஜ்ஜிய நேரம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது பாா்வையாளா்கள் கேலரியில் இருந்து மக்களவைக்குள் குதித்து, புகைக் குப்பிகளில் இருந்து மஞ்சள் நிறவாயுவை வெளியேற்றி முழக்கங்களை எழுப்பினா். அதன் பின்னா், அவா்கள் இருவரும் சில எம்.பி.க்களால் பிடிபட்டனா்.

அதே நேரத்தில், அமோல் ஷிண்டே மற்றும் நீலம் தேவி இருவரும் நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே ‘தனாஷாஹி நஹி சலேகி’ என்று கூச்சலிட்டுக் கொண்டே புகைக் குப்பிகளில் இருந்து வண்ண வாயுவைத் தெளித்தனா். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.