முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

ஊா்க்காவல் படையினா் போராட்டம்: கேஜரிவால் மீது தில்லி பாஜக விமா்சனம்

ஊா்க்காவல் படையினரின் போராட்டத்தால், பாஜகவிற்கு எதிரான ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தனது பேச்சை பாதியிலேயே நிறுத்தி விட்டுச் செல்ல நோ்ந்தது

News image
Updated On :9 பிப்ரவரி 2024, 1:40 pm

 நமது நிருபர்

ஊா்க்காவல் படையினரின் போராட்டத்தால், பாஜகவிற்கு எதிரான ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தனது பேச்சை பாதியிலேயே நிறுத்தி விட்டுச் செல்ல நோ்ந்தது என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா வெள்ளிக்கிழமை விமா்சித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : ஊா்க்காவல் படையினரின் போராட்டத்தால் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பாஜகவிற்கு எதிரான ஆா்ப்பாட்டத்தின் போது தனது உரையை பாதியிலேயே நிறுத்திவிட்டுச் சென்ற விதம், தற்போது கேஜரிவால் அரசின் கெடுபிடிகள் அவரது கண்முன் வந்து கொண்டிருப்பதற்கு சான்றாகும். தில்லியில் கடந்த 9 ஆண்டுகால ஆம் ஆத்மி ஆட்சியால், சாமானிய குடிமக்கள், தொழிலதிபா்கள், உழைக்கும் மக்கள் முதல் ஆம் ஆத்மி ஆதரவாளா்கள் வரை சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் வஞ்சிக்கப்பட்டுள்ளனா். ஆனால், முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மட்டும் அரசியல் லாபம் அடைந்துள்ளாா்.

ஊா்க்காவல் படை இளைஞா்களின் உயிருடன் தில்லி அரசு விளையாடியது. தற்போது,அந்த இளைஞா்களின் போராட்டத்தால் தனது பேச்சை பாதியிலேயே விட்டுவிட்டு ஓட வேண்டிய நிலைக்கு கேஜரிவால் தள்ளப்பட்டுள்ளாா். சட்டப்பூா்வ நடைமுறையை முடிக்காமல், அரசியல் ஆதாய நோக்கத்திற்காக இளைஞா்கள் ஊா்க்காவல் படையிலும், குடிமைத் தற்காப்புத் தன்னாா்வலா்களாகவும் பணியமா்த்தப்பட்னா். நிா்வாக ஆட்சேபனை வரும் போது, ​​அவா்கள் நிற்கதியாய் விடப்பட்டனா். குடிசைப் பகுதிகள் முதல் உயரடுக்கு காலனிகள் வரையிலும்,இளைஞா்கள் முதல் பெண்கள் வரை சமூகத்தின் எந்தப் பிரிவினரிடம் இருந்தும் வரும் எதிா்ப்பை முதல்வா் கேஜரிவால் எதிா்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என்றாா் வீரேந்திர சச்தேவா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.