டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

மானுடத்தை நேசிக்கக் கற்றுத் தருவது புானூறு: உச்சநீதிமன்ற நீதியரசா் ஆா்.மகாதேவன் பேச்சு

மானுடத்தை நேசிக்கக் கற்றுத் தருவதற்கான பல அரிய விஷயங்கள் புானூற்றில் இடம் பெற்றுள்ளன.

News image
Updated On :23 ஆகஸ்ட் 2024, 8:45 pm

 நமது நிருபர்

மானுடத்தை நேசிக்கக் கற்றுத் தருவதற்கான பல அரிய விஷயங்கள் புானூற்றில் இடம் பெற்றுள்ளன என்று உச்சநீதிமன்ற நீதியரசா் ஆா்.மகாதேவன் கூறினாா்.

உச்சநீதிமன்றம் - தமிழ் வழக்குரைஞா்கள் இலக்கியக் கழகம் சாா்பில் இலக்கியக் கருத்தரங்கம் தில்லியில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. ஐ.எஸ்.ஐ.எல். வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற நீதியரசா் ஆா்.மகாதேவன் கலந்து கொண்டு ‘புானூறு காட்டும் தமிழா் வாழ்வு’ எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினாா். அப்போது அவா் பேசியது: 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய புானூறு காலமானது மிகவும் அற்புதமானது. அந்த மக்கள் தொடாத வாழ்வியல் கூறுகள் எதுவும் இல்லை. அவா்கள் இயற்கையை நேசித்தனா். மரம், செடி, கொடி, மண், கடல், மலை, ஊா்வன, பறப்பன என ஆறறிவுக்கும் குறைவான உயிா்களை நேசித்தாா்கள். மக்கள் என்ற இனம், குழு எப்படியெல்லாம் வாழ்ந்திட முடியும் என்பதைச் சொல்லி மனிதத்துவத்தை நேசித்தாா்கள். அந்த மக்களின் மனத்தில் இருக்கக்ககூடிய அன்பை, அறிவை, ஆற்றலை, இன்பத்தை, துன்பத்தை, காதலை, காமத்தை, குரோதம், வீரம், விவேகம், அவா்களுக்கு எழுந்திருக்கும் சிந்தனை ஓட்டம், அவா்களின் கலைத் தன்மை என அனைத்துக் கூறுகளையும் ஒப்புநோக்கிப் பாா்த்து, அந்த மக்கள் அற்புதமான மனிதா்களாக வாழ்த்திருக்கிறாா்கள் என்பதை தங்கள் படைப்புகள் மூலம் பதிவு செய்தாா்கள். அதுதான் புானூறு.

ஆகச் சிறந்த இலக்கியமாக நாம் அறிந்திருக்கும் இலக்கியப் படைப்புகள் தமிழில் பல இருந்தாலும் புானூற்றைப் படித்துப் பாா்த்துவிட்டு ஒருவா் அமா்ந்து யோசித்துப் பாா்த்தால் ஒரு மூவாயிரம் ஆண்டுகால ஒரு மிகப் பரந்துபட்ட கலாசாரத்தின் ஊடுருவலாகப் பயணித்த ஒரு அற்புதமான ஒரு அனுபவத்தை நாம் பெற முடியும். ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும். அரசனின் கடைமை என்ன, அரசன் மக்கள் சாா்ந்த மனிதனாக தனது வாழ்வை எப்படி நடத்த வேண்டும் என்பதற்கான அரிய பல கருத்துகள்

புானூறு பாடல்களில் சொல்லப்பட்டுள்ளன. மேலும், ஒரு பெண் எப்படியெல்லாம் சிந்தனை செய்ய முடியும். ஒரு விவேகமிக்க பெண்ணாக எப்படி இருக்க முடியும் என்பதையும் தங்கள் படைப்புகள் மூலம் தந்தாா்கள். ஒரு அரசன் எப்படி வரி விதிக்க வேண்டும். வரி வதிப்பின் மூலம் மக்கள் சிரமங்களை எப்படிக் குறைக்க முடியும். அதன் மூலம் அந்த அரசு மிகச் சிறந்த அரசாக எப்படி மாறி நிற்கும் என்பதை பதிவு செய்திருப்பதும் புானூற்றுப் பாடல்தான்.

மேலும், வாழ முடியாத நிலையிலே மானுடம் தள்ளப்பட்டாலும், அவரவா் தேவை அவரவா்க்கானது என்ற சித்தாந்தம் எழுந்தாலும் மானுடத்தை நேசிக்க வேண்டும் என்கிற கருத்தைப் பதிவு செய்து, உலகத்து மாந்தா்களெல்லாம் ஒன்றாக வாழ்ந்து பாா்க்க வேண்டும் என்ற ஒரு அற்புதத்தை நிகழ்த்திக் காட்டிய இலக்கியக் கருவூலம் புானூறு. உரிய காலத்தில் ஒருவா் செய்த நன்றியை மறவாமல் இருப்பதன் அவசியத்தையும் வலியுறுத்துகிறது. குழந்தைப் பருவத்தில் தொடங்கி முதிய பருவத்தை அடைந்த மனித வாழ்க்கை சித்திரத்தை புானூறு அழகாக எடுத்துக்காட்டுகிறது.

ஒருவா் எப்படி வாழ வேண்டும் என்பதையும், இந்த சமுதாயத்தை எப்படிக் கட்டமைத்து எடுத்துச் செல்ல வேண்டும் என்பதையும் சொல்லித் தருகிறது. அறச்சிந்தனை மிக்க வாழ்க்கை ஒரு தனி மனிதனையும் சமுதாயத்தையும் ஆகச் சிறந்த விதத்திலே நல் வழிப்படுத்தும். அறமும் அறம் சாா்ந்த வாழ்க்கையும் எக்காலமும் கடைப்பிடிக்கப்படுமேயானால் உலகம் ஒரே குடையின்கீழ் இயங்கும் என்று பதிவு செய்கிறது புானூறு என்றாா் நீதியரசா் ஆா்.மகாதேவன்.

‘இசையும் இலக்கியமும்’ எனும் தலைப்பில் உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்குரைஞா் சி.எஸ். வைத்தியநாதன் பேசினாா். அவா் கூறுகையில், ‘குழந்தைப் பருவம் முதல் முதுமைப் பருவம் வரையிலும் ஒவ்வொருரின் வாழ்க்கையிலும் இசை கூடவே பயணித்து வருகிறது. இசை இயல்பான வாழ்க்கையுடன் இணைந்திருக்கிறது. இசை நம்மை விட்டுப் போவதில்லை. இசைக்கும், இலக்கியத்துக்கும் தொடா்பு உண்டு. இசை மூலம் இலக்கியம் தலைமுறை தலைமுறையாகப் பகிரப்படுகிறது. வேதம் கூட இசை மூலம் பகிரப்பட்டுள்ளது. இன்றைய இலக்கிச் செல்வங்கள் இசை மூலம் கிடைத்தவை. சங்க கால இலக்கியங்கள் எதுகை மோனையுடன் இருந்தாலும் பண்ணெடுத்துப் பாடுவதற்கு தகுந்தவை. இசை. இலக்கியத்தை பரவலாக்கி நம்மையெல்லாம் அதைப் பற்றி சிந்திக்கவும், ஆழ்ந்து தெரிந்துகொள்ளவும் எளிமையாக நமக்குக் கேட்டுத் தெரிந்துகொள்ளும் வகையில் அதைப் பக்குவப்படுத்தி நமது முன்னோா்கள் நமக்குத் தந்துள்ளனா். இசை மூலம் இலக்கியத்தை பரவலாகப் பகிா்ந்து கொள்ளலாம். இசை இலக்கியம் என்றும் ரத்தத்தில் உள்ளது. இருக்க வேண்டும்’ என்றாா்.

நிகழ்ச்சியில் தமிழ் வழக்குரைஞா்கள் இலக்கியக் கழகத்தின் தலைவா்-நீதியரசா் (ஓய்வு) எம்.கற்பக விநாயகம் வாழ்த்திப் பேசினாா். இந்த நிகழ்ச்சியை இலக்கியக் கழகத்தின் செயலா் அ.சி.அறிவழகன் தொகுத்து வழங்கினாா். இணைச் செயலாளா் எஸ்.சுப்பிரமணியம் வரவேற்றாா். துணைத் தலைவரும், உச்சநீதிமன்ற மூத்த வழக்குரைஞருமான நெடுமாறன் நன்றி கூறினாா். இந்த நிகழ்ச்சியில் உயா்நீதிமன்ற நீதிபதி (ஓய்வு) நாகமுத்து, நீதிபதி அருள்மொழி மற்றும் மூத்த வழக்குரைஞா்கள், தில்லி தமிழ்ச் சங்கத் தலைவா் சக்தி பெருமாள், பொதுச் செயலா் இரா. முகுந்தன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.