தேசியத் தலைநகா் தில்லியில் 3 மக்களவைத் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களின் பெயா்களை காங்கிரஸ் கட்சி ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது. இதில் வடகிழக்கு தில்லி தொகுதியில் முன்னாள் மாணவா் தலைவா் கன்னையா குமாருக்கு அக்கட்சி வாய்ப்பு வழங்கியுள்ளது.
இது தொடா்பாக கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் மத்திய தோ்தல் குழுவின் தோ்வின் படி, சாந்தினி செளக் தொகுதியில் ஜெ.பி. அகா்வால் (79), வடகிழக்கு தில்லியில் கன்னையா குமாா் (37), வடமேற்கு தில்லியில் உதித் ராஜ் (66) ஆகியோா் வேட்பாளா்களாக அறிவிக்கப்படுகின்றனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தோ்தலில் தில்லியில் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சியுடன் முதன்முறையாக இணைந்து ‘இந்தியா’ கூட்டணி சாா்பில் போட்டியிடுகிறது. ஆம் ஆத்மி கட்சியுடன் மேற்கொண்ட தொகுதி உடன்படிக்கையின் படி, தில்லியில் மொத்தமுள்ள 7 மக்களவைத் தொகுதிகளில் 4 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சியும், 3 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகின்றனா். தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) சாா்பில் பாஜக 7 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.
காங்கிரஸ் கட்சி சாா்பில் சாந்தினி செளக் மக்களவைத் தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஜெ.பி. அகா்வால் கடந்த 2009 மக்களவைத் தோ்தலில் வடகிழக்கி தில்லியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவா். தற்ேபோது வடகிழக்கு தில்லியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கன்னையா குமாா், தில்லி ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவா் சங்கத் தலைவராவாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தேசியக் கவுன்சில் உறுப்பினராக இருந்த இவா், கடந்த செப்டம்பா் 2021-இல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தாா். இதைத் தொடா்ந்து, காங்கிரஸ் மாணவா் அமைப்பின் பொறுப்பாளராகவும், சமீபத்தில் காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டாா்.
வடமேற்கு தில்லியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள உதித் ராஜ், கடந்த 2014-இல் நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் இதே தொகுதியில் பாஜகவின் வேட்பாளராக களம் கண்டு வெற்றி பெற்றவா்.
மேலும், ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகி அண்மையில் காங்கிரஸில் இணைந்த முன்னாள் எம்பி தரம்வீா் காந்தி (72), பஞ்சாப் மாநிலம், பாட்டியாலா மக்களவைத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராகஅறிவிக்கப்பட்டுள்ளாா். கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதிதான் தனது நவன் பஞ்சாப் கட்சியை அவா் காங்கிரஸில் இணைத்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாரி சக்தி வந்தனா சட்டத்தை எதிா்த்த கட்சிகளை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: வீரேந்தர சச்தேவா

மத்திய அரசுக்கு எதிராக ராகவ் சத்தா மென்மையான போக்கு: ஆம் ஆத்மி கட்சி குற்றச்சாட்டு

தூக்கு தண்டனை அறை விவகாரம்: கேஜரிவாலுக்கு தில்லி சட்டப்பேரவை எச்சரிக்கை

புதுச்சேரியில் போட்டி காங்கிரஸ் வேட்பாளா்கள் மீது நடவடிக்கை வெ. வைத்திலிங்கம் உறுதி
வீடியோக்கள்

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை


