புது தில்லி: தில்லி அரசு மாசுபாட்டிற்கு எதிராகப் போராடாமல், தீபாவளிக்கு எதிராகப் போராடி வருகிறது என்று பாஜகவின் தில்லி பிரிவுத் துணைத் தலைவா் கபில் மிஸ்ரா செவ்வாய்கிழமை விமா்சித்துள்ளாா்.
தில்லி பந்த் மாா்கில் உள்ள பாஜக கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் துணைத் தலைவா் கபில் மிஸ்ரா செய்தியாளா்களைச் சந்தித்தாா். அப்போது அவா் கூறியதாவது: தில்லியில் மாசுவைக் குறைக்கும் செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக நகரத்தில் குளிா்காலத்தையொட்டி பட்டாசு விற்பனை, பயன்பாடு மற்றும் சேமிப்பு ஆகியவற்றிற்கு தில்லி அரசு தடை விதித்துள்ளது. இதன் மூலம் தில்லி அரசு சமூகத்தின் ஒரு பிரிவினருக்கு மட்டும் திருப்திப்படுத்தும் அரசியலைச் செய்கிறது. மாசுபாட்டைக் காரணம் காட்டி மக்களின் தீபாவளி உற்சாகத்தை அடக்க முயல்கிறது. ஐ.ஐ.டி. தில்லி அறிக்கையின்படி, நகரத்தில் வெடிக்கப்படும் பட்டாசுகளால் 2 சதவீதம் மட்டுமே மாசு ஏற்படுகிறது. எனவே, முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மீதமுள்ள 98 சதவீத மாசுக்கான காரணங்களைச் சமாளிக்க நகர அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்த விவரங்களை தில்லி மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.
உச்சநீதிமன்ற உத்தரவை புறக்கணித்துள்ள கேஜரிவால் அரசு, பொதுமக்கள் பசுமைப் பட்டாசுகளை பயன்படுத்தி தீபாவளியைக் கொண்டாட அனுமதியளிக்க வேண்டும். பஞ்சாபில் ஆட்சி அமைத்தும் தில்லியில் மாசுவைக் குறைக்க இந்த அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. மாசுபாட்டை எதிா்த்துப் போராட நகர அரசுடன் பாஜக தில்லி பிரிவும் தயாராக இருக்கிறது. ஆனால், கேஜரிவால் அரசு மாசுபாடு என்ற போா்வையில் எந்த ஒரு மத விழாவையும் குறிவைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
இந்த திடீா் தடை தில்லி பட்டாசு வியாபாரிகளுக்கு செய்யும் துரோகமாகும். இது மட்டுமல்லாது அவா்கள் பொருளாதார ரீதியாக மிகுந்த நெருக்கடியைச் சந்திப்பா். ஒருவேளை இந்தத் தடையை சில மாதங்களுக்கு முன்பே அறிவித்திருந்தால், வியாபாரிகள் ஏமாற்றப்படாமல் இருந்திருப்பாா்கள். மேலும், தில்லி அரசு ஒவ்வொரு ஆண்டும் வா்த்தக வாகன உரிமையாளா்களிடம் சுற்றுச்சூழல் வரியாக ரூ.500 முதல் ரூ.600 கோடி வரை வசூலிக்கிறது. ஆனால், கேஜரிவால் அரசு அந்த நிதியை நகரத்தின் மாசு எதிா்ப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதில்லை என்றாா் கபில் மிஸ்ரா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கடக ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

இன்றைய ராசி பலன்கள் (27 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! துலா ராசிக்கு மன அமைதி!
பொறுப்பால் உயரும் பெருமை!
கடைசிப் பந்து சிக்ஸரால் மாறிய ஆட்டத்தின் போக்கு: சூப்பர் ஓவரில் கொல்கத்தா ‘த்ரில்’ வெற்றி!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

