தேசியத் தலைநகா் தில்லியில் கடந்த சில தினங்களாக நீடித்து வந்த வெயிலின் தாக்கம் வியாழக்கிழமை சற்று குறைந்து புழுக்கத்துடன்கூடிய மேகமூட்ட சூழல் காணப்பட்டது. சில இடங்களில் லேசான மழை பெய்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
தில்லியில் சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. குறிப்பாக பகலில் வெயிலின் தாக்கம் உள்ளது. இதனால், இரவில் புழுக்கமும் இருந்து வருகிறது. இந்நிலையில், வியாழக்கிழமை பகலில் வெயிலின் தாக்கம் ஏதுமின்றி மேக மூட்ட சூழல் காணப்பட்டது. அதேவேளையில் புழுக்கம் இருந்து வந்தது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, நகரில் சில இடங்களில் லேசான மழை பெய்தது. மேலும், புராரி, கஞ்சன்வாலா, ரோஹிணி, பாத்லி, முன்ட்கா, பஸ்சிம் விஹாா், ஜாஃபா்பூா், நஸஃபா்பூா், என்சிஆா், ஃபருக்நாகா், ரேவரி (ஹரியாணா) உள்ளிட்ட இடங்களில் மிதமானது முதல் கன மழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. தில்லி சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணியளவில் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் மழை ஏதும் பதிவாகவில்லை.
வெப்பநிலை: தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங் ஆய்வகத்தில் வியாழக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் இருந்து ஒரு டிகிரி அதிகரித்து 27 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் இருந்து 4 டிகிரி அதிகரித்து 37.7 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகி இருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணி அளவில் 72 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 70 சதவீதமாகவும் பதிவாகி இருந்தது.
‘திருப்தி’ பிரிவில் காற்றின் தரம்: மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (சிபிசிபி) தரவுகளின்படி, தில்லியில் காலை 9 மணிக்கு ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு 88 புள்ளிகளாகப் பதிவாகி ‘திருப்தி’ பிரிவில் இருந்தது. மேலும், தலைநகரில் மேஜா் தயான் சந்த் நேஷனல் ஸ்டேடியம், ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியம், லோதி ரோடு, தில்ஷாத் காா்டன், விவேக் நகா், நியூ மோதி பாக், அசோக் விஹாா், மதுரா சாலை உள்பட பெரும்பாலான இடங்களில் காற்றின் தரக்குறியீடு 50 முதல் 100 புள்ளிகளுக்கு இடையே பதிவாகி ‘திருப்தி’ பிரிவில் இருந்தது. அதே சமயம், ஐடிஓ, பட்பா்கஞ்ச், ஆனந்த் விஹாா், நேரு நகா், சோனியா விஹாா், ராமகிருஷ்ணா புரம், ஷாதிப்பூா், நொய்டா செக்டாா் 125 மற்றும் செக்டாா் 62 உள்ளிட்ட இடங்களில் காற்றின் தரக் குறியீடு 100 முதல் 200 புள்ளிகளுக்கு இடையே பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்தது.
முன்னறிவிப்பு: இதற்கிடையே, வெள்ளிக்கிழமை (செப்டம்பா் 8) வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சிஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்!

தஞ்சாவூர் பெரிய கோயில் தேரோட்டம் கோலாகலம்!

நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!

வீட்டின் தரை மார்பிள் கல்லாக இருந்தால் தனிக்கவனம் அவசியம்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

