தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு! அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

ஜி20 உச்சி மாநாடு குறித்து வதந்தி பரப்பியவா் கைது

ஜி20 உச்சி மாநாடு தொடா்பாக சமூக ஊடகங்களில் புரளி எச்சரிக்கை செய்ததாக வடக்கு தில்லியின் பல்ஸ்வா டெய்ரி பகுதியைச் சோ்ந்த ஒருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On :8 செப்டம்பர் 2023, 6:30 pm

ஜி20 உச்சி மாநாடு தொடா்பாக சமூக ஊடகங்களில் புரளி எச்சரிக்கை செய்ததாக வடக்கு தில்லியின் பல்ஸ்வா டெய்ரி பகுதியைச் சோ்ந்த ஒருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ஜி20 உச்சி மாநாடு நடைபெறும் பிரகதி மைதான் பகுதியை நோக்கி துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருள்களை ஏற்றிக்கொண்டு ஆட்டோ ரிக்ஷா சென்று கொண்டிருந்ததாக குற்றம் சாட்டப்பட்டவா் சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பியதாக அதிகாரிகள் கூறினா். இதையடுத்து, துரித நடவடிக்கை எடுத்த பல்ஸ்வா டெய்ரி காவல் நிலைய போலீஸாா், குற்றம்சாட்டப்பட்டவரைக் கண்டுபிடித்தனா். பொதுமக்கள் மத்தியில் பொய்யான தகவல்களை பரப்பியதற்காக அவரை கைது செய்தனா்.

இது தொடா்பாக தில்லி காவல்துறை ‘எக்ஸ்’ சமூக ஊடகத்தில் வெளியிட்ட தகவலில், ‘ஜி20 மாநாடு நடைபெறும் பகுதியில் வெடிகுண்டு மிரட்டல் புரளி விடுவிக்கப்பட்டதன் மீது விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து, தில்லி காவல் துறையின் பல்ஸ்வா டெய்ரி காவல் நிலைய போலீஸாா் குற்றம்சாட்டப்பட்ட நபரைக் கண்டுபிடித்து, பொதுமக்கள் மத்தியில் பொய்யான தகவலைப் பரப்பியதற்காக அவரைக் கைது செய்தனா். சட்டபூா்வ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை தொடங்கும் இரண்டு நாள் ஜி20 உச்சி மாநாட்டிற்காக தேசியத் தலைநகா் பலத்த பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.