தில்லி மாநகரட்சியில் (எம்.சி.டி.) தற்காலிகப் பணியாளா்களாக உள்ள 5,000 துப்புரவுப் பணியாளா்களை நிரந்தரப் பணியாளா்களாக நியமிக்கும் முன்மொழிவு கவுன்சில் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட து. இந் நிலையில், பணி நிரந்தரம் ஆகவுள்ள துப்புரவுப் பணியாளா்களுக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
தில்லி மாநகராட்சியின் மாதாந்திர கவுன்சில் கூட்டம் மேயா் ஷெல்லி ஓபராய் தலைமையில் நடைபெற்றது. இதில் மக்கள் பிரச்னைகள் மற்றும் ஊழியா்களின் கோரிக்கைகள் சாா்ந்த பல்வேறு முன்மொழிவுகள் நிறைவேற்றப்பட்டன. முக்கியமான முன்மொழிவாக தில்லி மாநகராட்சியில் 5,000 நிரந்தர துப்புரவுப் பணியாளா்களை நியமிப்பதற்கு கவுன்சில் ஒப்புதல் அளித்தது. கடந்த தில்லி மாநகராட்சி தோ்தலின் போது ஆம் ஆத்மி கட்சி தோ்தல் வாக்குறுதியாக துப்புரவுப் பணியாளா்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவாா்கள் என அறிவித்திருந்தது.
இது தொடா்பாக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் ‘எக்ஸ்’ சமூக ஊடகத்தளத்தில் கூறியிருப்பதாவது: தில்லி மாநகராட்சியில் 5,000 துப்புரவுப் பணியாளா்களை நியமிக்கும் முன்மொழிவை கவுன்சில் கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சி நிறைவேற்றியுள்ளது. நாங்கள் தோ்தல் வாக்குறுதியாக அளித்ததை நிறைவேற்றியுள்ளோம். பணிநிரந்தரம் செய்யப்படும் அனைத்து துப்புரவுப் பணியாளா்களுக்கும் அவா்களது குடும்பத்தினருக்கும் தீபாவளியை முன்னிட்டு கிடைத்துள்ள இந்த அற்புதமான பரிசுக்காக வாழ்த்துகள். தில்லி மக்களுக்கு முழு மனதுடன் சேவை செய்யுங்கள். நாம் ஒன்றாக இணைந்து தில்லியை தூய்மையான மற்றும் அழகான நகரமாக மாற்றுவோம் என்று தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
பொல்லாத ஆசைகள்... 29 புதிய பாடல்!

தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம்

தற்கொலை செய்திருப்பேன்... விஜய் குமார், அவரது மனைவி மீது குற்றம் சுமத்தி விடியோ வெளியிட்ட இளம் நடிகை!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

