மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

நிலக்கரி உற்பத்தி 42,825 கோடி டன்னாக உயர்வு 

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் 42,825 கோடி டன்னாக உயர்ந்துள்ளது.

News image
Updated On :5 அக்டோபர் 2023, 12:05 am

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் 42,825 கோடி டன்னாக உயர்ந்துள்ளது.

இது குறித்து மத்திய நிலக்கரித் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:
கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் நாட்டின் நிலக்கரி உற்பத்தி 42,825 கோடி டன்னாக உள்ளது.
முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இது 12.06 சதவீதம் வளர்ச்சியாகும். அப்போது நாட்டின் நிலக்கரி உற்பத்தி 38,216 கோடி டன்னாக இருந்தது. 

கடந்த செப்டம்பர் மாதத்தில் நாட்டின் நிலக்கரி உற்பத்தி 6,721 கோடி டன்னைத் தொட்டுள்ளது. இதுவும் 2022 செப்டம்பர் மாத நிலக்கரி உற்பத்தியான 
5,804 கோடி டன்னை விட 15.81 சதவீதம் அதிகமாகும்.

தடையில்லா விநியோகம்: மின்நிலையங்கள் உள்ளிட்டவற்றுக்கான நிலக்கரி விநியோகத்தைப் பொருத்தவரை, நடப்பு நிதியாண்டில் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் மொத்த நிலக்கரி விநியோகம் 46,232 கோடி டன்னாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

இது கடந்தாண்டின் இதே காலக்கட்டத்தை விட 10.96 சதவீதம் அதிகமாகும். அப்போது மின் உற்பத்திக்கான நிலக்கரி விநியோகம் 41,664 கோடி டன்னாக உள்ளது.  உற்பத்தி, விநியோகம், இருப்பு அளவுகளில் நிலக்கரி துறை முன்னெப்போதும் இல்லாத உயர்வைக் கண்டுள்ளது. இந்த விதிவிலக்கான வளர்ச்சிக்கு பொதுத் துறை நிலக்கரி நிறுவனங்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்புதான் காரணம். நிலையான நிலக்கரி உற்பத்தியையும், எரிசக்தி துறைக்கு தடையில்லாத விநியோகத்தையும் பராமரிக்க அமைச்சகம் உறுதிபூண்டுள்ளது என மத்திய நிலக்கரித் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.