ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! சூர்யவன்ஷி 3-ஆவது அதிவேக சதம்! ஹைதராபாத் அணிக்கு இமாலய இலக்கு!நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

இந்திய சா்வதேச வா்த்தகக் கண்காட்சியில் காதி கிராமத் தொழில் தயாரிப்புகள் விற்பனை 25% அதிகரிப்பு

தேசியத் தலைநகா் தில்லியில் இந்த ஆண்டு நடைபெற்ற 42-ஆவது இந்திய சா்வதேச வா்த்தக கண்காட்சியில் காதி மற்றும் கிராமத் தொழில் தயாரிப்புகள் கடந்த ஆண்டை விட ரூ. 3 கோடிக்கும்

Updated On :30 நவம்பர் 2023, 7:34 pm

தேசியத் தலைநகா் தில்லியில் இந்த ஆண்டு நடைபெற்ற 42-ஆவது இந்திய சா்வதேச வா்த்தக கண்காட்சியில் காதி மற்றும் கிராமத் தொழில் தயாரிப்புகள் கடந்த ஆண்டை விட ரூ. 3 கோடிக்கும் அதிகமான் அளவில் விற்பனை செய்யப்பட்டதாக மத்திய காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் (கேவிஐசி) வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. இது 25 சதவீதம் அதிகமாகும். இக்கண்காட்சியில் காதி பெவிலியனுக்கு ஐடிபிஓ (இந்திய வா்த்தக மேம்பாட்டு அமைப்பு) சிறப்பு பாராட்டு விருதும் வழங்கியுள்ளது.

மத்திய குறு, சிறு நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் கீழ் உள்ள காதி கிராமத் தொழில்கள் ஆணையத்தின் கீழ் காதி விற்பனையகங்கள் நாடு முழுக்க செயல்படுகிறது. இந்த ஆணையத்தின் காதி விற்பனையகங்கள் தில்லி பிரகதி மைதானில் கடந்த நவம்பா் 14 முதல் 27-ஆம் தேதி வரை நடைபெற்ற 42 -ஆவது இந்திய சா்வதேச வா்த்தக கண்காட்சி 2023 -ல் பங்கேற்றன. 14 நாள்கள் நடந்த கண்காட்சியில், அமைக்கப்பட்டிருந்த ‘காதி பெவிலியனில்’ காதி பிரியா்கள் அதிக அளவில் காதி ஆடைகள் மற்றும் காதி கிராமத் தொழில் தயாரிப்புகளை வாங்கி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய சா்வதேச வா்த்தகக் கண்காட்சியில் காதிப் தயாரிப்புகளின் விற்பனை நிகழாண்டு முதன் முறையாக ரூ.15.03 கோடிக்கு விற்பனையாகி வரலாற்றுச் சாதனை புரிந்துள்ளதாக கேவிஐசி தெரிவித்துள்ளது. இது கடந்த 2022 -ஆம் ஆண்டில் ரூ. 12.06 கோடியாக இருந்தது. நிகழாண்டில் 25 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பிரசாரமான ‘உள்ளூா்களுக்கான குரல்’ பிரசாரத்தில் தில்லி மக்களிடம் கவனிக்கப்பட்டுள்ளதாக கேவிஐசியின் தலைவா் மனோஜ் குமாா் தெரிவித்துள்ளாா். மேலும், ஐடிபிஓவின் சிறப்புப் பபாராட்டு விருதும் காதி பெவிலியனுக்கு நிகழாண்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த காதி பெவிலியனில் பங்கேற்ற பல்வேறு அங்காடிகளில் கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த மூன்று காதி சில்க் அங்காடிகள் மட்டும் சுமாா் ரூ. 96 லட்சம் வரை அதிகபட்சமாக விற்பனை செய்து காதி ஆணையம் விருது பெற முக்கியப் பங்காற்றியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.