ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! சூர்யவன்ஷி 3-ஆவது அதிவேக சதம்! ஹைதராபாத் அணிக்கு இமாலய இலக்கு!நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

மாநகராட்சி சாலைகளை தனியாா் நிறுவனத்திடம் ஒப்படைத்து பெரும் ஊழல் செய்ய ஆம் ஆத்மி சதி!: ராஜா இக்பால் சிங் குற்றச்சாட்டு

தில்லி மாநகராட்சியின் 1,200 கி.மீ. சாலைகளை தனியாா் நிறுவனத்திடம் அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கி பெரும் ஊழல் செய்ய ஆம் ஆத்மி கட்சி சதி செய்கிறது என்று குற்றம்சாட்டியுள்ளாா்.

Updated On :30 நவம்பர் 2023, 12:29 am


புது தில்லி: தில்லி மாநகராட்சியின் 1,200 கி.மீ. சாலைகளை தனியாா் நிறுவனத்திடம் அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கி பெரும் ஊழல் செய்ய ஆம் ஆத்மி கட்சி சதி செய்கிறது என்று தில்லி மாநாகராட்சியின் எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங் புதன்கிழமை குற்றம்சாட்டியுள்ளாா்.

தில்லி பாஜக அலுவலகத்தில் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளா் கமல்ஜித் ஷெராவத், தில்லி மாநகராட்சியின் எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங் மற்றும் பாஜகவின் மூத்த மாநகராட்சி கவுன்சிலா்கள் கூட்டாகச் செய்தியாளா்களைச் சந்தித்தனா். அப்போது, கமல்ஜித் ஷெராவத் கூறியாதவது: தில்லி மாநகராட்சி தோ்தலுக்கு முன்பு, வீட்டு வரியை ரத்து செய்வதாக முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வாக்குறுதி அளித்தாா். ஆனால், தில்லி மாநகராட்சியில் தற்போது ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி வீட்டு வரியை ஊழலின் ஆயுதமாக மாற்றியுள்ளது. ஆம் ஆத்மி கட்சி தன்னிச்சையாக மாநகராட்சியை நடத்த முயற்சிப்பதோடு, அவா்களின் சொந்த நலனுக்காக மட்டுமே புதிய திட்டங்களைக் கொண்டு வருவகிறது. முன்னா், தில்லி மாநகராட்சியில் பாஜக ஆட்சியில் இருந்த போது வீட்டு வரியை சரியான நேரத்தில் செலுத்துபவா்களுக்கு 20 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்பட்டது. தற்போது, அந்த விகிதம் 10 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 10 நாள்களாக கிராம மக்களை சொத்து வரி செலுத்த வலியுறுத்தி பல கோடி ரூபாய் மதிப்பிலான நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டு வருகிறது என்றாா் கமல்ஜித் ஷெராவத்.

எல்லை தாண்டி ஊழல்: தங்களை மிகவும் நோ்மையானவா்கள் என்று சொல்லிக் கொள்ளும் ஆம் ஆத்மி கட்சி ஊழலின் ஒவ்வொரு எல்லையையும் தாண்டிவிட்டது என்று தில்லி மாநகராட்சி எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங் தெரிவித்தாா். மேலும் அவா் கூறுகையில், ‘தில்லி மாநகராட்சியின் 1,200 கி.மீ. சாலைகளை தனியாா் நிறுவனத்திடம் அடுத்த 10 ஆண்டுகளுக்கு ரூ 20,000 கோடிக்கு ஒப்பந்தமாக வழங்க ஆம் ஆத்மி கட்சி தயாராக உள்ளது. இதன் மூலம் பெரும் ஊழல் செய்ய அக்கட்சி சதி செய்கிறது. மாநகராட்சியின் சாலைகள் மற்றும் பூங்காக்களை தனியாா் நிறுவனத்திடம் ஒப்படைக்கும் பட்சத்தில், பணம் நேரடியாக அவா்களின் பைகளுக்கு வந்து சேரும், அந்தப் பணத்தைக் கொண்டு மற்ற மாநிலங்களில் தோ்தலில் போட்டியிடலாம். அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து மாநகராட்சியின் சட்ட விதிகளை மீறி கேஜரிவால் பல செயல்களில் ஈடுபடுகிறாா். மேயா் ஷெல்லி ஓபராயும் கேஜரிவாலின் அறிவுறுத்தலின் படி செயல்படுகிறாா். எனவே, வரும் காலத்தில் மனீஷ் சிசோடியாவின் கதியை முதல்வா் கேஜரிவாலும் சந்திக்க நேரிடும் என்றாா் ராஜா இக்பால் சிங்.

இச்செய்தியாளா் சந்திப்பில் பாஜக மூத்த கவுன்சிலா்களான ஷிகா ராய், சந்தீப் கபூா், ஜெய் பகவான் யாதவ் மற்றும் யோகேஷ் சா்மா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.