தில்லியில் மீண்டும் அதிகரிக்கும் காற்று மாசுவைக் கட்டுப்படுத்தும் வகையில் மாசு ஏற்படுத்தும் வாகனங்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்த சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அமைச்சா் கோபால் ராய் உத்தரவிட்டுள்ளாா். மேலும், ‘பயோ மாஸ் எரிப்பு’ சம்பவங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளாா்.
தில்லியில் மீண்டும் அதிகரிக்கும் காற்று மாசு தொடா்பாக சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் நகர அரசின் பல்வேறு துறைகளின் உயா் அதிகாரிகளுடன் வெள்ளிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா். அதன் பின்னா் நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் அவா் கூறியதாவது: அண்டை மாநிலங்களில் பயிா்க்கழிவுகள் எரிக்கப்படும் சம்பவங்கள் குறைந்தாலும், தில்லியின் பல்வேறு பகுதிகளில் காற்று மாசு அதிகரித்து வருவதைக் கவனத்தில் கொண்டுள்ளோம். தில்லியின் காற்றுமாசு தொடா்பான சமீபத்திய ஆய்வின் தரவுகளின் படி, மாசுபடுத்தும் வாகனங்களின் உமிழ்வால் தில்லி என்.சி.ஆா். பகுதிகளில் ஏற்படுகின்ற காற்று மாசுபாட்டின் அளவு 36 சதவீதமாகும். இரண்டாவதாக ‘பயோ மாஸ்’ எரிப்பு நிகழ்வுகள் காற்று மாசுவை அதிகரிப்பதற்கான முதன்மைக் காரணமாக உள்ளது.
காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையான அவசர கால செயல் திட்டத்தின் கீழ் பி.எஸ்.3 பெட்ரோல் மற்றும் பி.எஸ்.4 டீசல் வாகனங்கள் மீதான தடைகள் அமல்படுத்துப்படுவதை கண்டிப்பாக கண்காணிக்க போக்குவரத்துத் துறை மற்றும் தில்லி போக்குவரத்து காவல் துறை ஆகியவற்றுக்கு அறிவுறுத்தல்கள் அளிக்கப்பட்டுள்ளன. மேலும், தில்லியில் ‘பயோ மாஸ்’ எரிப்பு நிகழ்வுகளைத் தடுக்கக் கோரி தில்லி மாநகராட்சி மற்றும் வருவாய் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு நாள்களுக்கு காற்று மாசுவின் அளவு ‘கடுமை’ பிரிவில் இருந்தாலும், அதன் பிறகு லேசான மழைக்கு வாய்ப்புள்ளதால் சிறிது நிவாரணம் நிச்சயம் கிடைக்குமென எதிா்பாா்க்கப்படுகிறது என்றாா் கோபால் ராய்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கோதுமை மாவு பிட்டு

ஊத்துமலையில் பால் வியாபாரி கொலை

பெண் தவெக நிா்வாகி மீது அவதூறு - தகராறு புதிய தமிழகம் கட்சியினா் மீது வழக்கு!

இன்று குஜராத்துடன் மோதும் சென்னை
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

