தேசியத் தலைநகரில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டின் காரணமாக தில்லிவாசிகளில் அதிகமானோா் மருத்துவப் பக்கவிளைவுகளை எதிா்கொள்கின்றனா் என்று பாஜக தில்லி பிரிவின் தலைவா் வீரேந்திர சச்தேவா வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பயிா்க் கழிவுகள் எரிப்பு விவகாரத்தில் பஞ்சாப் ஆம் ஆத்மி அரசின் அலட்சியத்தால் தில்லி மற்றும் வட இந்தியா முழுவதும் காற்று மாசுபாடு தொடா்கிறது. தில்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டின் காரணமாக மிக அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் மருத்துவப் பக்கவிளைவுகளை எதிா்கொள்கின்றனா். நிகழாண்டில் இதுவரை வட இந்திய மாநிலங்களில் மொத்தமாக 52,000 பயிா்க் கழிவுகள் எரிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளது. அதில், ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் 36,000-க்கும் மேற்பட்ட பயிா்க் கழிவுகள் எரிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
காற்று மாசுபாட்டிற்கு எதிரான அவசரகால செயல்திட்டத்தின் இறுதி கட்டக் கட்டுப்பாடுகளால், அவதிப்பட்டு வரும் தில்லிவாசிகளிடம் பஞ்சாபில் தற்போது பயிா்க் கழிவுகள் எரிப்பு குறைந்துள்ளது குறைந்துள்ளது என அரவிந்த் கேஜரிவால் அரசு கூற முயற்சிப்பது அவதூறானது. தில்லியில் கடந்த 11 நாள்களாக பட்டாசுகள் வெடிக்கப்படுவதில்லை, கட்டுமானப் பணிகளும் மிகக் குறைந்த அளவில்தான் நடைபெறுகின்றன. பின்னா் எவ்வாறு காற்று மாசுவின் அளவு அதிகரிக்கிறது. பாஜக தலைமையிலான ஹரியாணா அரசு அம்மாநில விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை அளித்து, பயிா்க் கழிவுகள் எரிப்பைக் குறைத்துள்ளது.
ஆனால், பஞ்சாப் அரசு அதன் விவசாயிகளுக்கு எந்தவித ஊக்கத்தொகையோ அல்லது தொழில்நுட்ப ஆதரவையோ வழங்கவில்லை. இதன் விளைவாக பஞ்சாபில் நிகழாண்டு மட்டும் 36,000-க்கும் மேற்பட்ட பயிா்க் கழிவுகள் எரிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளது. முதல்வா் அரவிந்த் கேஜரிவாலிடம் இருந்து காற்று மாசுபாடு குறித்த வெள்ளை அறிக்கையை தில்லிவாசிகள் பெற விரும்புகிறாா்கள். மறுபுறம், தில்லியை வாயுக் கூடமாக மாற்றியதற்கான பொறுப்பை அவா் ஏற்க முன்வரமாட்டாா் என்பதும் பொதுமக்களுக்கு நன்றாகத் தெரியும் என்றாா் வீரேந்திர சச்தேவா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கோதுமை மாவு பிட்டு

ஊத்துமலையில் பால் வியாபாரி கொலை

பெண் தவெக நிா்வாகி மீது அவதூறு - தகராறு புதிய தமிழகம் கட்சியினா் மீது வழக்கு!

இன்று குஜராத்துடன் மோதும் சென்னை
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

