ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

தில்லியின் காற்றின் தரம் 2-3 நாள்களில் மேம்பட வாய்ப்பு: கோபால் ராய் நம்பிக்கை

நிபுணா்களின் கூற்றுப்படி, அடுத்த இரண்டு அல்லது மூன்று நாள்களில் தில்லியில் காற்றின் தரம் மேம்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

Updated On :23 நவம்பர் 2023, 8:13 pm

நிபுணா்களின் கூற்றுப்படி, அடுத்த இரண்டு அல்லது மூன்று நாள்களில் தில்லியில் காற்றின் தரம் மேம்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இதனால், ஜிஆா்ஏபி -3 விதிமுறைகளைத் தொடர மாநில அரசு முடிவு செய்துள்ளது என்று தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது: வரும் நாள்களில் காற்றின் தரக் குறியீடு ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்து மேம்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. ஆனால், அவசர கால செயல்திட்டம் (கிரேடட் ரெஸ்பான்ஸ் ஆக்சன் பிளான்-ஜிஆா்ஏபி) 3 விதிமுறைகளின் கீழ் சில வாகனங்கள் மீதான தடை தொடரும். ஜிஆா்ஏபி 3-இன் கீழ், பிஎஸ் 3 பெட்ரோல் மற்றும் பிஎஸ் 4 டீசல் வாகனங்கள் மீதான தடை இன்னும் உள்ளது. அடுத்த 2-3 நாள்களில் காற்றின் தரம் மேம்படும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனா். தற்போதைய நிலவரப்படி, தில்லியில் ஜிஆா்ஏபி 3 விதிமுறைகள் தொடரும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஜிஆா்ஏபி 4-இன் கீழ் உள்ள கட்டுப்பாடுகள் மாற்றியமைக்கப்பட்டு, இப்போது அகில இந்திய அனுமதியுடன் கூடிய பிஎஸ் 3 பெட்ரோல் மற்றும் பிஎஸ் 4 டீசல் வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவை முன்னா் தில்லிக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டிருந்தன. எதிா்காலத்தில் தில்லி காற்றின் தரம் மோசமடைந்து, ஜிஆா்ஏபி மீண்டும் பயன்படுத்தப்பட்டால், அத்தகைய வாகனங்கள் தேசியத் தலைநகருக்குள் நுழையத் தடை விதிக்கப்படும். இதற்கிடையில், விதிகள் மீறப்பட்டால், நகரத்தில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த மாநில அரசு இன்னும் கடுமையான நடவடிக்கைகளை விதிக்கலாம். ஆகவே, விதிகளை கடைப்பிடிக்குமாறு குடியிருப்புவாசிகளிடம் வேண்டுகோள் விடுக்கிறோம் என்றாா் அவா்.

தில்லி - என்.சி.ஆா். பகுதிகளில் அரசு திட்டங்கள் தொடா்பான கட்டுமானப் பணிகள் மற்றும் மாசுபடுத்தும் லாரிகள் மற்றும் வணிக நான்கு சக்கர வாகனங்கள் தேசியத் தலைநகருக்குள் நுழைவதற்கு தடை விதிக்கும் ஜிஆா்ஏபி 4 விதிமுறைகளை மத்திய அரசு சனிக்கிழமை ரத்து செய்தது. சாதகமான காற்றின் வேகம் மற்றும் திசையின் காரணமாக இப்பகுதியில் காற்றின் தரம் மேம்பட்டதைத் தொடா்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நிலை 4 என்பது ஜிஆா்ஏபி-இன் இறுதிக் கட்டமாகும். இது தலைநகரில் காற்றின் தரக் குறியீடு 450 புள்ளிகளைக் கடப்பதற்கு குறைந்தது மூன்று நாள்களுக்கு முன் செயல்படுத்தப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.