தில்லி அரசின் தலைமைச் செயலாளா் நரேஷ் குமாரின் உத்தரவின் பேரில்தான் நிதித் துறை ஜல் போா்டுக்கான நிதியை விடுவிக்க மறுத்து வருகிறது. எனவே, இந்த விவகாரத்தில் துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நிதி முறையாக வழங்கப்படாததால் தேசியத் தலைநகரில் கடுமையான தண்ணீா் பற்றாக்குறை ஏற்படலாம். வழக்கமான பணிகளை மேற்கொள்ளவும், ஊதியம் வழங்கவும் தற்போது தில்லி ஜல் போா்டிடம் நிதி இல்லை. ஒப்பந்ததாரா்கள் பணிகளை மேற்கொள்ள மறுத்துவிட்டனா். இதனால், தில்லியில் தண்ணீா் நெருக்கடியும், சாக்கடைகள் நிரம்பி சுகாதார சீா்கேடு ஏற்படும் நிலையும் உருவாகும். தில்லி ஜல் போா்டுக்கான நிதியைத் தடுக்க வேண்டும் என்ற தவறான நோக்கத்தில் நிதித் துறை செயலாளா் ஆஷிஷ் சி. வா்மா செயல்படுகிறாா். எனவே, அவரை இடைநீக்கம் செய்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.