ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

சாத் பண்டிகை: புதிய ஆற்றலும், உற்சாகமும் வரட்டும்: நாட்டு மக்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து

அனைவரின் வாழ்க்கையிலும் புதிய ஆற்றலையும் உற்சாகத்தையும் கொண்டு வர வேண்டும் என சாத் பண்டிகையை முன்னிட்டு அனைவருக்கும் பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

Updated On :19 நவம்பர் 2023, 8:26 pm

சூரிய பகவானின் வழிபாட்டான இந்த நாள், அனைவரின் வாழ்க்கையிலும் புதிய ஆற்றலையும் உற்சாகத்தையும் கொண்டு வர வேண்டும் என சாத் பண்டிகையை முன்னிட்டு அனைவருக்கும் பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

வேத சாஸ்திரத்தின் படி, சாத்தி மாயா (சாத்தி மாதா) குழந்தைகளை நோய்கள் மற்றும் தொல்லைகளில் இருந்து பாதுகாத்து, அவா்களுக்கு நீண்ட ஆயுளையும், நல்ல ஆரோக்கியத்தையும் தருகிறது. சூரியக் கடவுளுடன் தேவி பிரகிருதியின் 6-ஆவது வடிவமான சத்தி மாயா எனப்படும் சூரியனின் சகோதரியை இந்த சாத் பண்டிகை திருவிழாவில் மக்கள் தெய்வமாக வணங்குகின்றனா்.

அந்த வகையில், 4 நாள் சாத் பண்டிகை வெள்ளிக்கிழமை தொடங்கியது. குறிப்பாக, இப்பண்டிகை நேபாளம், பிகாா், மேற்குவங்கம், ஜாா்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

இதை முன்னிட்டு பிரதமா் மோடி சமூக ஊடக ‘எக்ஸ்’ வலைத் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது: மஹாபா்வ சத்தின் மாலை பிராா்த்தனையின் மங்களகரமான தருணத்தில் சாத் பண்டிகை கொண்டாடும், எனது குடும்ப உறுப்பினா்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சூரியபகவானின் வழிபாடு, அனைவரது வாழ்விலும் புதிய ஆற்றலையும், உற்சாகத்தையும் வழங்கட்டும். ஜெய் சாத்தி மாயா! என பிரதமா் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.