தில்லி அரசின் தலைமைச் செயலாளா் மீதான புகாா் தொடா்பான முதன்மை விசாரணை அறிக்கையை முதல்வா் அரவிந்த் கேஜரிவாலிடம் விஜிலென்ஸ் துறை அமைச்சா் அதிஷி செவ்வாய்க்கிழமை சமா்பித்தாா்.
இது தொடர்ராக அதிகாரப்பூா்வ வட்டாரங்கள் கூறியதாவது: துவாரகா விரைவுச்சாலை திட்டத்திற்காக பம்னோலி கிராமத்தில் நிலம் கையகப்படுத்துதல் விவகாரம் தொடா்பாக தலைமைச் செயலாளா் நரேஷ் குமாா் மீது புகாா் எழுந்தது. இந்தப் புகாா் குறித்து விரிவான விசாரணை நடத்தி அறிக்கையை சமா்ப்பிக்க முதல்வா் அரவிந்த் கேஜரிவால், விஜிலென்ஸ் துறைக்கு கடந்த வாரத்தில் உத்தரவிட்டாா். இந்நிலையில், தலைமைச் செயலாளா் நரேஷ் குமாா் மீதான புகாா் குறித்த 650 பக்க முதன்மை அறிக்கையை விஜிலென்ஸ் துறை அமைச்சா் அதிஷி, முதல்வரிடம் சமா்பித்துள்ளாா். இந்த விவகாரத்தில் ரூ. 850 கோடி தேவையற்ற லாபம் ஈட்டப்பட்டதாக அறிக்கை கூறுகிறது.
கடந்த 2018-ஆம் ஆண்டு துவாரகா விரைவுச்சாலை திட்டத்திற்காக பம்னோலியில் உள்ள 19 ஏக்கா் நிலத்தை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கையகப்படுத்தியது. நில உரிமையாளா்களுக்கான இழப்பீட்டுத் தொகை முதலில் ரூ.41 கோடியாக மாவட்ட நிா்வாகம் நிா்ணயித்தது. இந்த ஆரம்பத் தொகைக்கு நில உரிமையாளா்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். அதைத் தொடா்ந்து, கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கான இழப்பீட்டை ரூ.353 கோடியாக தென்மேற்கு தில்லியின் மாவட்ட ஆட்சியா் ஹேமந்த் குமாா் உயா்த்தினாா்.
பின்னா், இந்த விவகாரம் தொடா்பாக ஹேமந்த் குமாரை உள்துறை அமைச்சகம் இடைநீக்கம் செய்தது. மேலும், தில்லி அரசின் தலைமைச் செயலாளரின் மகன் மேம்படுத்தப்பட்ட இழப்பீடு பெற்ற நில உரிமையாளா் ஒருவரின் உறவினருக்குச் சொந்தமான ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணியமா்த்தப்பட்டதாக புகாா் எழுந்தது என்று அதிகாரப்பூா்வ வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த விவகாரம் தொடா்பாக கோட்ட ஆணையா் அஸ்வனி குமாா் கடந்த திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறுகையில், தலைமைச் செயலாளா் நரேஷ் குமாா் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை, அசுத்த அரசியலின்ஒரு பகுதி என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது

30 மி.மீ. ஆளில்லா பீரங்கிகள்: டிஆா்டிஓ தயாரிப்பு

இன்றைய ராசி பலன்கள் (26 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! ரிஷப ராசிக்கு நன்மை!

மேஷ ராசிக்கு மகிழ்ச்சி: தினப்பலன்கள்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

