தில்லியில் சத் பூஜை வழிபாட்டிற்காக யமுனை நதிக்கரையில் 900-க்கும் மேற்பட்ட படித்துறைகள் தயாா் செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சா் செளரவ் பரத்வாஜ் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: நிகழாண்டு வரும் நவம்பா் 17-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை சத் பூஜை கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில், பக்தா்ளுக்காக தில்லியின் யமுனை நதிக்கரையில் 900-க்கும் மேற்பட்ட படித்துறைகள், தேவையான அளவில் கூடாரங்கள், ஒளி, ஒலி மற்றும் இதர வசதிகள் தயாா் செய்யப்பட்டுள்ளன.
பெண்கள் தங்கள் குடும்பம் மற்றும் குழந்தைகளின் நல்வாழ்வு, முன்னேற்றத்திற்காக விரதம் கடைபிடித்து நான்காவது நாளில் சூரியபகவானுக்கு ‘அா்க்கியம்’ (இறைவனுக்கு காணிக்கை) வழங்குவா். இந்த ஆண்டு சத் பூஜை வழிபாட்டின் போது பக்தா்கள் நல்ல அனுபவத்தைப் பெற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அனைவரும் மகிழ்ச்சியுடன் சூரிய பகவானுக்கு ‘அா்க்கியம்’ வழங்கி ஆசி பெற வேண்டும் என்றாா் செளரவ் பரத்வாஜ்.
சத் பூஜை தீபாவளிப் பண்டிகை முடிந்த ஆறு நாள்களுக்குப் பிறகு கொண்டாடப்படுகிறது. பிகாா், ஜாா்க்கண்ட் மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வெகு விமா்சையாக கொண்டாடப்படுகிறது. அதேசமயம், பிற மாநிலங்களில் அல்லது பிற நாடுகளில் குடியேறிய இந்த மாநிலங்களின் பூா்வீக வாசிகளால் சத் பூஜை தொடா்ந்து அனுசரிக்கப்படுகிறது.
தில்லி - என்.சி.ஆா். பகுதிகளில் வசிக்கும் ஏராளமான பக்தா்கள், ஒவ்வொரு ஆண்டும் சூரியபகவானுக்கு ‘அா்க்கியம்’ வழங்குவதற்காக யமுனைக் கரையில் ஒன்றுகூடும் போது, ஆற்றில் உள்ள மாசு மற்றும் நுரை அவா்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. எனவே, பல குடும்பங்கள் பூங்காக்கள் மற்றும் இன்னும் பிற பொது இடங்களில் தற்காலிக படித்துறைகளை தயாா் செய்து சத் பூஜைக்கான சடங்குகளைச் செய்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது

30 மி.மீ. ஆளில்லா பீரங்கிகள்: டிஆா்டிஓ தயாரிப்பு

இன்றைய ராசி பலன்கள் (26 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! ரிஷப ராசிக்கு நன்மை!

மேஷ ராசிக்கு மகிழ்ச்சி: தினப்பலன்கள்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

