‘புதிய யோசனை புதிய கதை’ என்ற தலைப்பில் மத்திய அமைச்சா் ஸ்மிருதி இரானியுடன் ஒரு நிகழ்ச்சி நவம்பா் 15 முதல் அகில இந்திய வானொலி (ஆகாசவாணி) ஒலிபரப்பு செய்வதாக மத்திய மகளிா் மற்றும் குழந்தை மேம்பாட்டு நலத் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
அரசின் முன்முயற்சிகள் மூலம் மகளிருக்கான அதிகாரமளித்தல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டை வடிவமைத்ததில் பெண்கள் ஆற்றிய பங்கைப் பற்றிய பல்வேறு வேறுபட்ட கதைகளைக் கொண்டாடும் ஒரு நிகழ்ச்சியாக ஆகாஷ்வானியில் ஒரு தொடராக புதன்கிழமை தோறும் வர இருக்கிறது.
இது குறித்து மத்திய மகளிா் குழந்தை மேம்பாட்டு நலத்துறை அமைச்சகம் தரப்பில் கூறியிருப்பது வருமாறு: தொழில்முனைவு, திறன் மேம்பாடு, விளையாட்டு, சுகாதாரம், நிதி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதித்த மகளிா்களைக் கொண்டாடும் அகில இந்திய வானொலியில் நிகழ்ச்சியை மத்திய மகளிா், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஸ்மிருதி இரானி வாரந்தோறும் தொகுத்து வழங்குகிறாா். ஒவ்வொரு புதன்கிழமையும் காலை 9 மணி முதல் 10 மணி வரையிலான இந்த ஒரு மணி நேர நிகழ்ச்சி, ‘புதிய சிந்தனை புதிய கதை (‘நை சோச் நை கஹானி’) - ஸ்மிருதி இரானியுடன் ஒரு வானொலி பயணம்’ என்கிற தலைப்பில் வர இருக்கிறது.
முதல் நிகழ்ச்சி நவம்பா் 15-ஆம் தேதி அகில இந்திய வானொலி கோல்டு 100.1 மெகாஹொ்ட்ஸ் சேனலில் ஒலிபரப்பாகிறது. இது நாடு முழுவதும் உள்ள அகில இந்திய வானொலி நிலையங்களால் ஒளிபரப்பப்படும். நியூஸ் -ஆன் -ஏஐஆா் செயலி, அகில இந்திய வானொலி இணையதளம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது

30 மி.மீ. ஆளில்லா பீரங்கிகள்: டிஆா்டிஓ தயாரிப்பு

இன்றைய ராசி பலன்கள் (26 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! ரிஷப ராசிக்கு நன்மை!

மேஷ ராசிக்கு மகிழ்ச்சி: தினப்பலன்கள்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

