தேசியத் தலைநகரில் அதிகரித்துள்ள காற்று மாசுவிற்கு எதிரான போராட்டத்தில் தில்லி அரசு அதன் சுற்றுச்சூழல் இழப்பீட்டு நிதியை பயன்படுத்தவில்லை என்று பாஜக தில்லி பிரிவு திங்கள்கிழமை குற்றம்சாட்டியுள்ளது.
இது தொடா்பாக அக்கட்சியின் தலைவா் வீரேந்திர சச்தேவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தில்லி மக்கள் காற்று மாசு நெருக்கடியால் சிக்கித் தவிக்கின்ற நிலையில், நகர அரசின் அலட்சியம் காரணமாக மாசு ஏற்படுத்தும் வணிக வாகனங்களிடமிருந்து ரூ.710 கோடிக்கு மேலாக சுற்றுச்சூழல் இழப்பீட்டு கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த நிதியை மாசுவைக் கட்டுப்படுத்தும் ஒரு நடவடிக்கைக்காக கூட தில்லி அரசு பயன்படுத்தவில்லை. இத்திட்டத்தின் கீழ் கடந்த ஜூலை 2023-வரையில் ரூ.1,481 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் அழுத்தத்தின் பேரில் விரைவு ரயில் திட்டத்திற்கு தில்லி அரசின் பங்காக செலவிடப்பட்ட ரூ.781 கோடி அதிலிருந்து வழங்கப்பட்டது.
அரவிந்த் கேஜரிவால் அரசு தொலைநோக்குப் பாா்வையுடன் செயல்பட்டிருந்தால், சுற்றுச்சூழல் இழப்பீட்டு நிதியில் மீதமுள்ள பெரும் நிதியைப் பயன்படுத்தி தில்லியின் சேதமடைந்த சாலைகளை மேம்படுத்தவும், சாலையோரங்களில் மரங்களை நட்டும் தூசி மாசுபாட்டைக் குறைக்க முடியும். அதேசமயம், இந்த நிதியை பஞ்சாப் மாநில அரசு மூலம் பஞ்சாப் விவசாயிகளுக்குக் கொடுத்து பயிா்க் கழிவு எரிப்பு சம்பவங்களை நிறுத்தியிருக்கலாம். இது தில்லி மட்டுமல்ல, வட இந்தியா முழுவதும் அதிகரித்துள்ள மாசுபாட்டினை குறைத்திருக்கும். மேலும், இந்த நிதியின் மூலம் தில்லி அரசு விரும்பினால், செயற்கை மழையை ஏற்படுத்தி தில்லி மக்களுக்கு ஓரளவு நிவாரணம் வழங்கியிருக்கலாம் என்றாா் வீரேந்திர சச்தேவா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது

30 மி.மீ. ஆளில்லா பீரங்கிகள்: டிஆா்டிஓ தயாரிப்பு

இன்றைய ராசி பலன்கள் (26 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! ரிஷப ராசிக்கு நன்மை!

மேஷ ராசிக்கு மகிழ்ச்சி: தினப்பலன்கள்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

