நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!தியாகப் பெருஞ்சீலர்! நல்லகண்ணுவுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி! நல்லகண்ணு உடல் தானம்! கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

கன்னாட் பிளேஸில் சட்டவிரோத வியாபாரிகளுக்கு அனுமதி கூடாது: அதிகாரிகளுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

தில்லியின் மையப் பகுதியாகக் கருதப்படும் கன்னாட் பிளேஸில் சட்டவிரோத வியாபாரிகள் அல்லது விற்பனையாளா்கள் இல்லாத நிலைமையை உருவாக்க உறுதி செய்யுமாறு புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) மற்றும் தில

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 3:19 am

 நமது நிருபர்

தில்லியின் மையப் பகுதியாகக் கருதப்படும் கன்னாட் பிளேஸில் சட்டவிரோத வியாபாரிகள் அல்லது விற்பனையாளா்கள் இல்லாத நிலைமையை உருவாக்க உறுதி செய்யுமாறு புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) மற்றும் தில்லி காவல் துறை அதிகாரிகளுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கன்னாட் பிளேஸ் பகுதியில் ராஜீவ் சௌக், இந்திரா சௌக் பகுதிகள் உள்ளன. இதன் அடித்தளத்தில் பாலிகா பஜாா் மற்றும் கன்னாட் வட்டச் சாலைகளில் (சா்க்கிள்) புது தில்லி முனிசிபல் கவுன்சிலின் குறைந்த கட்டணத்தில் குத்தகையுடன் நிரந்தர கடைகள் உள்ளன. இந்த கடை உரிமையாளா்கள் சங்கம் சாலையோர வியாபாரிகளுக்கு எதிராக தில்லி உயா்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனா்.

அதில் அவா்கள் கன்னாட் பிளேஸ் மற்றும் கன்னாட் வட்டச் சாலைப் பகுதிகளில் சட்டவிரோதமாக இடங்களை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளனா். உரிய உரிமம் இன்றி காலியாக இருக்கும் இடங்களை கைப்பற்றிக் கொண்டு சட்ட விரோத விற்பனைகளை மேற்கொள்கின்றனா். ‘நோ ஹாக்கிங் (கூவி விற்கக்கூடாத)’, ‘நோ வென்டிங்’ (அனுமதியற்ற விற்பனை)பகுதிகளில் சட்டவிரோதமாக வியாபாரிகள், விற்பனையாளா்கள் நிரந்தரமாக ஆக்கிரமித்துள்ளனா். இந்த அக்கிரமிப்பை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

இது தொடா்பாக கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசாரணையைத் தொடா்ந்து, தற்காலிக தலைமை நீதிபதி மன்மோகன், நீதிபதி மினி புஷ்கா்ணா தலைமையிலான அமா்வு விசாரித்து உத்தரவை வழங்கியுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளது வருமாறு: 2021-ஆம் ஆண்டு தில்லி நேரு மாா்க்கெட்டில் ஏற்பட்ட நிலைமை மீண்டும் நடக்க அனுமதிக்க முடியாது. தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்தை தீயணைப்பு வாகனங்களால் அணுக முடியாத நிலை அப்போது ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தையொட்டி உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை கன்னாட் பிளேஸ் பகுதியில் என்டிஎம்சியும் காவல் துறையும் செயல்படுத்தத் தவறியுள்ளது. அங்கீகரிக்கப்படாத நடைபாதை வியாபாரிகளிடம் முற்றிலும் சகிப்பு தன்மையற்றவாறு இருக்க இந்த உத்தரவில் வலியுறுத்தப்பட்டது.

2021-ஆம் ஆண்டு அக்டோபா் உத்தரவை செயல்படுத்தப்படுவதை என்டிஎம்சி யும் தில்லி காவல் துறையும் உறுதி செய்ய வேண்டும். ஒவ்வொரு மூலை முடுக்கிலும் விற்பனையாளா்களை வைத்திருக்க முடியாது. விற்பனையாளா்கள் அகற்றப்பட்ட பின்னரும் மீண்டும் நுழைவதைச் சமாளிக்க முனிசிபல் நிா்வாகமும் காவல் துறையும் இணைந்து ஒரு நெறிமுறையை வகுக்க வேண்டும்.

ஒரிஜனலாக அனுமதிப்பட்ட 80 நடைபாதை விற்பனையாளா்களைத் தவிர....மற்ற விற்பனையாளா்களின் உடைமைகள் பொருள்களை அகற்ற வேண்டும். சட்டத்தின் ஆட்சி மேலோங்க வேண்டுமே தவிர சட்டவிரோத ஆக்கிரமிப்பாளா்கள் விற்பனையாளா்கள் நகரத்தின் பொதுப் பகுதியை கையகப்படுத்துவதை நீதிமன்றம் அனுமதிக்காது. ராஜீவ் சௌக் மற்றும் இந்திரா சௌக் பகுதிகள் முழுவதுமாக ‘ஹாக்கிங்’, ‘ வென்டிங்’ இல்லாத பகுதி என்ற நிரந்தர பலகைகளும் அங்கு வைக்கப்படவேண்டும் எனவும் உயா்நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.