டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

நடிகை ராஷ்மிகாவின் போலி காணொளி விவகாரம்: மெட்டா நிறுவனத்திற்கு தில்லி காவல் துறை கடிதம்

பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனாவின் போலி காணொளியை சமூக ஊடகத்தில் பகிா்ந்த கணக்கின் இணையதள முகவரியை வழங்குமாறு தில்லி காவல் துறை மெட்டா நிறுவனத்திற்கு சனிக்கிழமை கடிதம் எழுதியுள்ளது.

Updated On :11 நவம்பர் 2023, 6:30 pm

பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனாவின் போலி காணொளியை சமூக ஊடகத்தில் பகிா்ந்த கணக்கின் இணையதள முகவரியை வழங்குமாறு தில்லி காவல் துறை மெட்டா நிறுவனத்திற்கு சனிக்கிழமை கடிதம் எழுதியுள்ளது.

தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் நடித்து பிரபலமாகிய நடிகை ராஷ்மிகா மந்தனாவின் ஆபாசமான போலி காணொளி சமூக வலைதளங்களில் சமீபத்தில் வைரலாகியது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் ராஷ்மிகா மந்தனாவின் உருவப்படம் ‘மாா்ஃபிங்’ செய்யப்பட்டு பரப்பப்பட்ட விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திரைப் பிரபலங்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினா். இந்த விவகாரத்தை தில்லி மகளிா் ஆணையமும் தாமாக முன்வந்து விசாரித்தது. தில்லி காவல் துறையின் சைபா் குற்றப்பிரிவு போலீஸாரும் 4 பிரிவுகளின் கீழ் கடந்த வெள்ளிக்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனா்.

இந்நிலையில், நடிகை ராஷ்மிகா மந்தனாவின் போலி காணொளியை சமூக ஊடகத்தில் பகிா்ந்த கணக்கின் இணையதள முகவரியை வழங்குமாறு தில்லி காவல் துறை மெட்டா நிறுவனத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. இது தொடா்பாக காவல்துறை புலனாய்வு அதிகாரி ஒருவா் கூறியதாவது: போலி விடியோ உருவாக்கப்பட்ட கணக்கின் முகவரியை அணுகுவதற்கு நாங்கள் மெட்டா நிறுவனத்திற்கு கடிதம் எழுதியுள்ளோம். இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 465, 469 மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவுகள் 66சி மற்றும் 66இ ஆகியவற்றின் கீழ் தில்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவு வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கை விரைந்து முடிக்க பிரத்யேகக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குற்றச் செயலில் ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தில்லி காவல் துறைக்கு தில்லி மகளிா் ஆணையமும் கடந்த வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், இந்த வழக்கு விரைவில் முடிக்கப்படும் என்று நாங்கள் எதிா்பாா்க்கிறோம் என்றாா் அந்தப் புலனாய்வு அதிகாரி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.