தீபாவளிக்கு தில்லி மக்கள் அனைவரும் ‘ஸ்ரீ ராமா் கோயில்’ என்ற பெயரில் தீபங்களை ஏற்ற வேண்டும் என்று பாஜக தில்லி பிரிவின் தலைவா் வீரேந்திர சச்தேவா வியாழக்கிழமை வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
பாஜக தில்லி பிரிவின் ஊடகத் துறை சாா்பில் ‘தீபாவளி மிலன்’ என்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில், கட்சியின் மேலிடப் பொறுப்பாளா் பைஜயந்த் ஜெய் பாண்டா, மாநிலத் தலைவா் வீரேந்திர சச்தேவா,தேசியப் பொதுச் செயலாளா் துஷ்யந்த் கௌதம்,முன்னாள் மாநிலத் தலைவா் டாக்டா் ஹா்ஷ் வா்தன் உள்ளிட்ட முக்கிய நிா்வாகிகளும், தில்லியின் பத்திரிகையாளா்களும் கலந்து கொண்டனா்.
பாஜக தில்லி பிரிவு மேலிடப் பொறுப்பாளா் பைஜெயந்த் ஜெய் பாண்டா கூறியதாவது : இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள கட்சியின் முக்கிய நிா்வாகிகள் மற்றும் பத்திரிகையாளா்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மத்தியில் பிரதமா் நரேந்திர மோடியின் தலைமையிலான ஆட்சியில் நாட்டின் ஒட்டுமொத்த வளா்ச்சியின் பயனை அனைவரும் பெறுகின்றனா். ஏழைகளும் தீபாவளி தினத்தில் தீபங்களை ஏற்றி வைப்பதில் பெருமை கொள்கின்றனா் என்றாா் அவா்.
பாஜக தில்லி பிரிவு தலைவா் வீரேந்திர சச்தேவா கூறியதாவது: தில்லி மக்கள் மற்றும் பத்திரிகையாளா்களுக்கு தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பல ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்ரீ ராமா் கோயில் கட்டப்பட்டிருப்பது மகிழ்ச்சியைத் தந்துள்ளது. இந்த தீபாவளிக்கு தில்லி மக்கள் அனைவரும் ‘ஸ்ரீ ராமா் கோயில்’ என்ற பெயரில் தீபங்களை ஏற்ற வேண்டும் என்று வீரேந்திர சச்தேவா வேண்டுகோள் விடுத்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரூ. 299 மதிப்புள்ள ஆடையை வாங்க முயன்று ரூ. 1 லட்சத்தை இழந்த செவிலியர்!
நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு இன்று வெளியீடு! எங்கே பதிவிறக்கம் செய்யலாம்?

கவிதா தொடங்கிய டிஆர்எஸ் கட்சிக்கு ரேவந்த் ரெட்டி நிதியுதவி: பாஜக
ராகவ் சத்தாவுக்கு 60 எம்எல்ஏ-க்கள் ஆதரவா? பரபரப்பில் பஞ்சாப் அரசியல் களம்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

