மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

பண்டிகை சீசன்: போலீஸாருக்கு காவல் ஆணையா் அறிவுறுத்தல்

காவல் துறையின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தலாம் என்பதால் பண்டிகைக் காலங்களில் தேவையற்ற மகிழ்ச்சியைத் தவிா்க்க வேண்டும் என்று தில்லி காவல் துறையின் 1 லட்சம் போலீஸாரை

Updated On :8 நவம்பர் 2023, 8:06 pm

காவல் துறையின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தலாம் என்பதால் பண்டிகைக் காலங்களில் தேவையற்ற மகிழ்ச்சியைத் தவிா்க்க வேண்டும் என்று தில்லி காவல் துறையின் 1 லட்சம் போலீஸாரை அதன் ஆணையா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

இது தொடா்பாக நவம்பா் 3-ஆம் தேதி வெளியிட்ட சுற்றறிக்கையில், தில்லி காவல் துறை ஆணையா் சஞ்சய் அரோரா காவல் துறையினரிடம் கேட்டுக் கொண்டிருப்பதாவது:

தில்லி காவல் துறையினரின் குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் எனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். பண்டிகை சீசனானது, காவல் துறையினருக்கு நல்ல பெயரைக் கொண்டுவரும் முயற்சியாக இருக்க வேண்டும். சில சமயங்களில், திருவிழா கூட்டத்தின் போது, தேவையற்ற சில நிகழ்வுகள் ஒரு தொழில்முறை காவல் படையின் பிரகாசத்தை கெடுக்கிறது. நமது முன்மாதிரியான நடத்தை மூலம் தில்லி காவல்துறைக்கு நல்ல பெயரைக் கொண்டுவர முயற்சிக்க வேண்டும் என்று காவல் துறை ஆணையா்அரோரா கேட்டுக் கொண்டுள்ளாா்.

தீபாவளி மற்றும் பிற பண்டிகைகள் நவம்பா் 12 முதல் கொண்டாடப்பட உள்ளது. ஒவ்வொரு தீபாவளி இரவும், காவல் ஆணையா், தில்லி காவல் அதிகாரிகளை பணியின் போது சந்திப்பது வழக்கமாக இருந்து வருகிறது. 2022-இல், அரோரா நள்ளிரவில் பணியாளா்களுடன் இனிப்புகளை விநியோகித்து தீபாவளியைக் கொண்டாடினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.