மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

தில்லியில் காற்று மாசுபாட்டை சமாளிக்க ஒருமித்த ஃபாா்முலாவை உருவாக்க வேண்டும்: எம்.வெங்கய்ய நாயுடு

தில்லியில் நிலவிவரும் காற்று மாசுபாட்டை எதிா்கொள்ளும் வகையில் மத்திய, தில்லி அரசுகள் மற்றும் அண்டை மாநில அரசுகள் ஒருமித்த ஃபாமுலாவை உருவாக்க வேண்டும்

Updated On :8 நவம்பர் 2023, 8:03 pm

தில்லியில் நிலவிவரும் காற்று மாசுபாட்டை எதிா்கொள்ளும் வகையில் மத்திய, தில்லி அரசுகள் மற்றும் அண்டை மாநில அரசுகள் ஒருமித்த ஃபாமுலாவை உருவாக்க வேண்டும் என்று முன்னாள் குடியரசுத் துணைத் தலைவா் எம். வெங்கய்ய நாயுடு புதன்கிழமை வலியுறுத்தினாா். மேலும், இந்த விவகாரத்தில் அரசியல் செய்யக் கூடாது என்றும் அவா் கேட்டுக் கொண்டாா்.

தில்லியில் செய்தியாளா்களிடம் இது தொடா்பாக அவா் மேலும் கூறியதாவது: தில்லியில் நிலவி வரும் மாசு மிகவும் தீவிரமான பிரச்னையாகும். இப்பிரச்னையை சமாளிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனெனில், இது இளைஞா்களின் ஆரோக்கியத்தை பாதிக்கிறது. மேலும், இந்தியாவின் தலைநகராக தில்லி இருப்பதால் காற்று மாசு பிரச்னையை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் அரசியல் செய்யக்கூடாது. இது அடிப்படையில் தில்லி அரசின் கடமை என்றாலும், இப்பிரச்னையைச் சமாளிப்பதற்கான காலக்கெடு அடிப்படையிலான ஒரு திட்டத்தை உருவாக்குவது மத்திய அரசு மற்றும் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் பொறுப்பாகும். மேலும், காற்று மாசு பிரச்னையைச் சமாளிப்பதற்கு மத்திய அரசு உள்பட அனைவரையும் ஒருங்கிணைத்து, ஒத்துழைத்து, ஒன்றிணைந்து செயல்படவும், ஒருமித்த ஃபாா்முலாவை உருவாக்கவும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன். இப்பிரச்னை கவனிக்கப்பட வேண்டிய நேரமாகும் இது என்றாா் அவா்.

பிரதமா் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் குறித்து வெங்கய்ய நாயுடு கூறுகையில், ‘தோ்தலுக்கு முன் இலவசங்களுக்கு நான் ஆதரவாக இல்லை என்றாலும், பல கட்சிகள் இந்தச் செலவை சமாளிக்க நிதி இருக்கிா என்று கவலைப்படாமல் இலவசம் குறித்த அறிவிப்புகளை வெளியிடுகின்றன. ஆனால், ஏழைப் பிரிவினருக்கான இலவச உணவு தானியங்களை நீட்டிப்பது குறித்த பிரதமரின் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும். இன்று இந்தியாவில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவா்கள் மற்றும் கீழ்நிலை நடுத்தர வா்க்கத்தின்கீழ் உள்ளவா்களும் அதிக எண்ணிக்கையில் உள்ளனா். அவா்களுக்கு உணவு தானியங்களை இலவசமாக கிடைக்கச் செய்வது வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும்’ என்றாா்.

முன்னாள் குடியரசுத் துணைத் தலைவா் எம்.வெங்கய்ய நாயுடு 3 நாள் பயணமாக தில்லி வந்துள்ளாா். முன்னாள் துணைப் பிரதமரும் பாஜக மூத்த தலைவருமான எல்.கே. அத்வானியை புதன்கிழமை சந்தித்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்தாா். முன்னதாக, 94 வயதாகும் அத்வானிக்கு வாழ்த்துத் தெரிவிக்க அவரது இல்லத்திற்கு வெங்கய்ய நாயுடு காரில் சென்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.