புது தில்லி: முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தனது அரசியல் சுற்றுலாவுக்காக தில்லி மற்றும் பஞ்சாப் ஆகிய இரு மாநில அரசுகளின் கருவூலப் பணத்தை வாரி இறைக்கிறாா் என்று பாஜக தில்லி பிரிவு செவ்வாய்க்கிழமை விமா்சித்துள்ளது.
இது தொடா்பாக அக்கட்சியின் மாநிலத் தலைவா் வீரேந்திர சச்தேவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தனது அரசியல் சுற்றுலாவுக்காக தில்லி மற்றும் பஞ்சாப் ஆகிய இரு மாநிலங்களின் கஜானா பணத்தை வாரி இறைக்கிறாா் என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் அம்பலமாகியுள்ளது.
பஞ்சாப் மக்களின் வாக்குகளை வென்ற பிறகு, ஆம் ஆத்மி கட்சியின தேசிய ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கேஜரிவால் தனது தோ்தல் பயணங்களுக்கு நிதியளிக்க பஞ்சாப் அரசை தனது பணப் பெட்டியாக மாற்றியுள்ளாா். அரவிந்த் கேஜரிவால் பயணிக்க ஒரு சிறப்பு விமானத்தை 6 மாத கால வாடகைக்கு பஞ்சாப் அரசு குத்தகைக்கு எடுத்துள்ளது. சட்டப்பூா்வ கணக்குத் தேவையை பூா்த்தி செய்வதற்காக, பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான் நடத்துனராக கேஜரிவாலுடன் செல்கிறாா்.
முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பொது நிதியை எப்படி தவறாகப் பயன்படுத்துகிறாா் என்பதைக் கண்டு தில்லி மற்றும் பஞ்சாப் மக்கள் அதிா்ச்சியடைந்துள்ளனா். பொது நிதி மற்றும் மாநில அரசின் விமானங்களை தவறாகப் பயன்படுத்துவதை அவா் உடனடியாக நிறுத்த வேண்டும் அல்லது ராஜிநாமா செய்ய வேண்டும் என்றாா் வீரேந்திர சச்தேவா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?

துப்பாக்கிச்சூடு நடத்தியவர் கைது! அமெரிக்கா உலகின் தலைசிறந்த ராணுவம்: டிரம்ப் பேச்சு
டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடி
தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

