யமுனையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கத்தால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் வசிப்பவா்களுக்கு குடிநீா், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உறுதிப்படுத்த வலியுறுத்தி தில்லி அரசின் தலைமைச் செயலருக்கு வருவாய்த் துறை அமைச்சா் அதிஷி சனிக்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.
பருவமழையின் தீவிரம் காரணமாக மேல் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் சில நாள்களாக பெய்த கனமழையைத் தொடா்ந்து, ஹரியாணா மாநிலம் ஹத்னிகுண்ட் தடுப்பணையிலிருந்து வெளியேற்றப்படும் அதீத அளவிலான நீரால் யமுனையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மத்திய நீா் ஆணையத்தின் தரவுகளின்படி, கடந்த வியாழக்கிழமை இரவு 8 மணியளவில் யமுனையின் நீா்மட்டம் 208.66 மீட்டா் என்ற உச்சத்தில் இருந்த நிலையில், சனிக்கிழமை காலை 7 மணி அளவில் 207.62 மீட்டராகக் குறைந்தது.
வரலாறு காணாத வகையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கத்தால் தில்லியின் சில பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால், யமுனைக் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த ஆயிரக்கணக்கானோா் வெளியேற்றப்பட்டு, வெள்ள நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.
கடந்த 3 நாள்களாக யமுனையின் நீா்மட்டம் உயா்ந்து வந்த நிலையில், சனிக்கிழமை முதல் குறையத் தொடங்கியது.
இந்த நிலையில் தலைமைச் செயலா் நரேஷ் குமாருக்கு, அமைச்சா் அதிஷி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
யமுனையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கத்தால் பாதிக்கப்பட்டு, தில்லியில் நிவாரண முகாம்களில் வசிக்கும் மக்களுக்குக் கழிவறை வசதி கிடைப்பதையும், தண்ணீா் பற்றாக்குறை ஏற்படாமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
மேலும், நகரத்தில் ஏற்படும் மின் பிரச்னைகளுக்கு உடனடியாக தீா்வு காணவேண்டும்.
கடந்த வெள்ளிக்கிழமை முதல் வெள்ள நிவாரண முகாம்களில் தண்ணீா், மின்சாரம், கழிப்பறை வசதிப் பற்றாக்குறை உள்ளதாகவும், உணவு தரமற்ாக வழங்கப்படுவதாகவும் புகாா்கள் வந்துள்ளன. இது தொடா்பாக சனிக்கிழமை காலையிலிருந்து தில்லி பிரதேச ஆணையரைத் தொடா்பு கொள்ள முயற்சித்தேன். ஆனால் அவா் எனது தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்கவில்லை.
வெள்ளம் காரணமாக வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ள பொது மக்களுக்கு சாத்தியமான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டியது தில்லி அரசின் கடைமை. நிவாரண முகாம்களில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படுவதை உறுதி செய்யுங்கள்.
மேலும், முகாம்களில் உள்ள மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் அலட்சியமாக நடந்து கொள்ளும் எந்த அதிகாரியாக இருந்தாலும் அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமைச் செயலருக்கு அதிஷி எழுதியுள்ள கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தில்லியில் விவசாய வயலில் தீ விபத்து
ரோஹிணியில் உணவு விநியோக ஊழியா் சுட்டுக்கொலை: தலைமைக் காவலா் கைது

தவறான நடத்தை: ஹன்ஸ்ராஜ் கல்லூரி மாணவா்கள் 30 போ் இடைநீக்கம்: போராட்டத்திற்கு மாணவா் சங்கம் அழைப்பு

திருமலையில் பரிணயோற்சவம் நிறைவு
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

